பக்கம்:அறப்போர்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அறப்போர்


உபசாரம் செய்தானோ அதே அன்போடு எல்லோருக்கும் உபசாரம் செய்யத் தொடங்கினான். பல நாட்களாகப் பாராதிருந்த நெருங்கிய உறவினரை அன்புடன் வரவேற்று உபசரித்துப் பழகுவதுபோலப் பழகினான். புலவர்களுடைய புலமைத் திறத்தை அறிந்து பாராட்டினான். அந்தக் கூட்டத்தில் புலமை நிரம்பாதவர்களும் இருந்தார்கள். அவர்களுக்கும் இன்சொல் சொல்லி ஊக்கமூட்டினான்.

இந்தக் காட்சியையும் ஔவையார் கண்டார். புலவர்களுக்குக் காமதேனுவைப் போலவும் கற்பகத்தைப் போலவும் அதியமான் விளங்குவதைக் கண்டு ஆனந்தங் கொண்டார். வெவ்வேறு மக்களுக்கு அடுத்தடுத்து ஈவதென்றாலே எல்லாச் செல்வர்களுக்கும் இயலாத காரியம், கொடையிலே சிறந்தவனென்று பெயர் பெற்ற கண்ணன் கூட ஒரு நாளில் குறிப்பிட்ட நேரத்தில் தான் தானம் செய்வான். இவனோ எந்த நேரத்திலும் புலவர்களை வரவேற்று உபசரிக்கிறான். ஒருவரே பல நாள் வந்தாலும் மீட்டும் மீட்டும் பாராட்டிப் பரிசில் தருகிறான். தனியாக வந்தாலும் பலரோடு வந்தாலும் சிறிதும் வேறுபாடின்றி அன்பு காட்டுகிறான். அகமும் முகமும் மலர்ந்து பரிசில் தருகிறான். முதல் முதல் எத்தனை ஆர்வமும்

98

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அறப்போர்.pdf/116&oldid=1267490" இலிருந்து மீள்விக்கப்பட்டது