பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/337

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இறார்கள் என்பதை அவர்கள் சொல்லித் தானே ஆக வேண்டும்' என்று பதிலளித்தார் அவர், நான் மீண்டும் இவ்வாறு கூறினேன்;

  • * கேட்பதற்குத் தகுதியாகக் கூறுவதற்கு ஒரு நபரிடம் எந்த

விஷயமும் இல்லையென்றால், அவர் மௌனமாக இருந்து விடுவதே நல்லது. உங்களிடம் 'நான் என்ன கூற வேண்டும் என்று எதிர் பார்க்கப்படுகிறது? ஒரு பிரதிநிதி தாம் செய்துள்ள காரியங்களைக் குறித்துத் தமது வாக்காளர்களுக்கு விபரம் தெரிவிக்க வேண்டியது ஒரு சம்பிரதாய வழக்கம். எனினும் உண்மையில் எங்களது பணி விவரித்துக் கூறக் கூடியதா என் sr? சொல்லதைக் காட்டிலும் செய்து காட்டுவது எளிது என் டதை நீங்களே அறிவீர்கள், தற்போது வேட்பாளர்களான எங்களில் இரண்டு பேர் இங்கிருக்கிறோம். நிக்கொலாய் வ!7 மிலியேவிச் இசிலோவும், நானும் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர் கள்; ஆயினும் இதனால் எங்களுக்குள் அபிப்பிராய பேதமோ என்றும் ஏற்படுவ தில்லை என்று அர்த்தமாகாது. விஷயம் அதிய வசரமானதாக இருக்குமானால், இரவு முழுவதும் விழித்திருக்கத் தயாராக உள்ளவரும், அதிகாலை இரண்டு மணிக்சே வெஷன்ஸ் காயா வுக்குத் தொலைபேசி மூலம் கூப்பிட்டுப் பேசுபவருமான ஒரு பிராந்தியக் கமிட்டிச் செயலாளர் உண்மையில் நல்ல செயலாளர்தான்; இவரோடு வேலை பார்ப்பது எனக்கு எளிதாக வும் உள்ளது; இதன் விளைவாக, எங்களுக்குள் நாங்கள் சில வட்டாரப் பிரச்சினைகளை நன்றாகச் சமாளிக்கவும் செய்கிறோம். மேலும் எங்களுக்கு எல்லாவிதமான பிரச்சினைகளும் உள்ளன. - ஒரு பிரதிநிதியாக இருப்பதோடு கூட.., நான் ஒரு எழுத் தாளனாகவும் இருக்கிறேன் என்பதை நீங்கள் அறிவீர்கள். எழுத்தாளனாக இருப்பது எப்படி. என்பதையும் நீங்கள் அறிவீர்கள்: சில சமயங்களில் ஓர் அத்தியாயம் எப்படி. அமைய வேண்டும் என்று நாம் விரும்புகிறோமோ அந்த மாதிரி அது நமக்கு அமையவே அமையாது; நாம் எழுதியுள்ள தும் நமக்குப் பிடிக்காது; இதனால் நமக்குத் தூக்கமும் வராது. இதன்பின் நாம் சற்று நேரம் வெளியே போக வேண்டியிருக்கும்; ஒரு முறை புகை பிடிக்கவும், டான் நதியை ஏறிட்டுப் பார்த்துக் கொண்டிருக்கவும், மீண்டும் எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்க்கவும் வேண்டியிருக்கும். ஒரு முறை இப்படித்தான் நான் சூரியன் எழுவதற்கு முன்பே, அதிகாலை நான்கு மணிக்கே வெளியே வந்தேன். அது கோடைக்காலம். என் வீட்டு வாசலுக்கு வெளியே ஒரு வண்டியையும், நுகக்கால் சுளிவிருந்து அவிழ்த்துவிடப் பெற்ற ஒரு ஜோடி, எருதுகளையும், இரண்டு.

312

312