பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

153



தானே? ஈரோட்டில் பயிற்சி பெற்றவன் அப்படித்தான் பேசுவாணய்யா!’ என்று தான் பலர் கூறுவார்கள். ஆனால், அப்படிக் கூறியவன் கருப்புச் சட்டைக்காரன் அல்லன். வெள்ளைக்காரன். பெவர்லி நிக்கோலஸ் என்பவர், குமரி முதல் காஷ்மீர் வரை எல்லா இடங்களையும், மக்களையும் பார்வையிட்டு, நிலை தெரிந்து ஆராய்ந்து, அதன் பின்னரே இந்தியாவைப் பற்றி ஒரு புத்தகம் Verdict on india என்று எழுதினார். அதிலே தான் அவர் குறிப்பிட்டிருக்கிறார் ‘பாம்பைக் கொல்லாதே’ என்று.

இந்த நூலை எழுதியதற்காக ஆசைத்தம்பிக்கு ஆறு மாதம் சிறை தண்டனை! சிறைக்குள்ளே அவர் தலையை மொட்டை அடித்தார்கள்! யார் அடித்தார்கள்? அதிகாரிகள்தான்!

‘தனியரசு’ என்ற பத்திரிகையிலே ஏ.வி.பி. ஆசைத்தம்பி எழுதிய எழுத்துக்கள் ஒவ்வொன்றும் ஈட்டி முனைகளாகப் பாய்ந்தன. இந்தப் புத்தக ஆசிரியர் என்.வி. கலைமணி அந்த நாளேட்டில் துணை ஆசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.

இத்தகைய எழுத்தாண்மைமிக்க ஆசைத்தம்பி எம்.எல்.ஏ.-ஆக, எம்.பி.யாக மட்டுமல்ல; திரை உலகிலும் புகுந்து, சேலம் மார்டன் தியேட்டர்ஸ் எடுத்த, புரட்சி நடிகர் எம்.ஜி.ஆர். நடித்த ‘சர்வாதிகாரி’ என்ற திரைப்படத்துக்கும் கதை-வசனம் எழுதினார்.

அந்தமான் தீவு கழகத் தோழர்கள் அழைப்பை ஏற்றுச் சொற்பொழிவாற்றச் சென்ற ஏ.வி.பி. ஆசைத்தம்பி 7.4.70 அன்றிரவு எதிர்பாராத இறப்பை ஏற்றார்! அவரது புகழுடலைத் தமிழ் நாடு முதல் அமைச்சர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். மனிதநேயத்துடன் உறவினர்களிடம் கொண்டு வந்து ஒப்படைத்தார்!

என்.வி. நடராசன்

‘திராவிடன்’ பத்திரிகை

உழைப்பு; எளிமை, இரண்டாலும் முன்னேறிய சுயமரியாதை வீரர் என்.வி. நடராசன் தமிழ்நாட்டின் அமைச்சராகவும் பணியாற்றினார். இவர் சென்னையிலுள்ள ‘ஹோ அண்ட் கோ’ என்ற அச்சகத்தில் அச்சுக் கோர்ப்பவர் குழுவுக்கு மேலாளராக இருந்தார். சிலம்புச் செல்வர் என்று