பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

272

அரசு ஒதுக்கும் செய்தி அச்சுத்தாள் பெறும் திட்டம்!


Policy) அறிவிக்கும் நேரத்தில் நாம் சென்று அதற்கான ஆக்கப் பணிகளில் ஈடுபட வேண்டும்.

அச்சுத்தாள் கோட்ட
(Quota) விவரம்

அச்சுத்தாள் வழங்கும் நிறுவனத்தார் தரும் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்பு, பதிவாளர்களுக்கு இரண்டு படிகள் அனுப்ப வேண்டும்.

இந்தப் படிவம் புது தில்லி இந்தியச் செய்தித்தாள் தலைமை அலுவலகத்திலும், புது தில்லியிலுள்ள Paper Exports and imports அலுவலகத்திலும், சென்னை யிலுள்ள Paper South Trading Corporation என்ற நிறுவனத்திலும் பெறலாம்.

ஆனால், பேப்பர் இறக்குமதியாளர்கள் Government Established Importers அரசு பேப்பர் கோட்டா விற்பனைக்காரர்களா? என்று கவனிக்க வேண்டும்.

ஓர் ஆண்டுக்கு எவ்வளவு பேப்பர் நமது பத்திரிகைக்குத் தேவை என்பதையும், நாம் அச்சடிக்கும் பத்திரிகையின் பக்கங்கள் எத்தனை என்பதையும், அது எந்த அளவு பேப்பர் வகை என்பதையும், அதாவது டபுள் டெம்மியா? டபுள் கிரவுனா? அல்லது வேறு வகையான காகித அளவா? தின ஏடா? வார இதழா? மாதப் பத்திரிகையா? என்று விவரத்துக்கு ஏற்றவாறு ஆண்டுக்குரிய மொத்த பேப்பர் தேவையைக் கணக்கிட்டு, அதிகாரப் பூர்வமான ஆடிட்டரிடம் அதற்குரிய சான்றிதழ் பெற்று, புது தில்லி இந்தியச் செய்தித்தாள் பதிவாளருக்கு இரண்டு படிவங்களை அனுப்ப வேண்டும்.

நாம் அனுப்பும் செய்தித் தாட் கணக்குகள் சரிதானா என்று தில்லி அலுவலக அரசு அதிகாரிகள் பரிசோதனை செய்த பிறகு, நமக்கேற்றச் செய்தித் தாட்களை ஒதுக்கிக், கட்டளைப் படிவம் (Order) அனுப்புவார்கள்.