பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

273



குறைந்த அளவு 40 டன் தாட்கள் தேவைப்படுவோருக்கு வருமான வரிச் சான்றிதழ் தேவையில்லை. அதிகம் வேண்டுபவர்கள் ஆடிட்டர் சான்றிதழோடு அனுப்ப வேண்டும்.

செய்தி அச்சுத் தாட்கள் மட்டுமன்று; ஆர்ட் பேப்பர் (Art Paper), மெக்கானிக்கல் கிளேஸ் எனப்படும் பேப்பர், ப்ளாக் மேக்கிங், சிங்க் (Zink), புகைப்படம் (Film) கார்டு போர்டு, ப்ரவுன் பேப்பர் போன்றவைகட்கும் கோட்டா அளவு உண்டு! தேவை என்றால் அதற்கான படிவங்களில் அரசு கேட்கும் விவரங்களைப் பூர்த்தி செய்து அனுப்பினால் பெறலாம். அந்த விவரம் முழுவதையும், நியூஸ் பிரிண்ட் பேப்பர் வழங்கும் நிறுவனத்திலேயே கேட்டுப் பெறலாம்.

பத்திரிகை அச்சடிக்கும் வெளிநாட்டு இயந்திரங்களை இறக்குமதி செய்யுமளவுக்கு வலிமையுடைய பத்திரிகையாளராக இருந்தால், அதற்குரிய விண்ணப்பங்களை ஏற்றுமதி இறக்குமதி செய்யும் அரசு பிரிவு அலுவலகத் தலைமை அதிகாரிகளுக்கு அனுப்ப வேண்டும்.

அததற்குரிய விவரங்கள் விண்ணப்ப மனுக்களிலேயே இருக்கின்றன. படித்துப் பார்த்துத் தவறேதும் ஏற்படாதவாறு, அதைப் பூர்த்திச் செய்து அனுப்பினால் அரசு உதவிகளை உறுதியாகப் பெறலாம்.

வெளிநாட்டு அச்சடிக்கும் மெஷின்களுக்கான அந்நிய செலாவணித் தொகையில் அச்சு வகை சம்பந்தப்பட்டவைகளுக்கு 50 சதவிகிதம் சிறு பத்திரிகைகளுக்கும், 35 சதவிகிதத்தை நடுத்தர வளர்ச்சியுடைய இதழ்களுக்கும், 15 சதவிகிதத்தை பெரிய பத்திரிகையாளர்களுக்கும் பயன் படுத்துகிறது அரசு.

அச்சு இயந்திரங்கள் இறக்குமதி செய்ய விரும்புபவர்கள் ஜெர்மனி, இத்தாலி, இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா,