பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

புலவர் என்.வி. கலைமணி

353



கண்ணோட்டக் கருத்தை
வெளிப்படுத்தும் பேட்டி

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் பராசக்தி படம் மூலம் அறிமுகமாகி அண்ணா கட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்ட மன உணர்ச்சியுடையவராக இருந்தார். பிறகு அவர் தேசியக் கட்சியில் சேர்ந்து தீவிர பங்கு கொண்டதால், திருப்பதி கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்து திரும்பினார்.

செய்தியாளர்கள் அறிஞர் அண்ணா அவர்களை அணுகி, ‘உங்களுடைய கட்சியிலே இருந்த நடிகர் திலகம் திருப்பதி சென்று வழிபாடு செய்துள்ளாரே என்று நேருக்கு நேராகக் கேள்வியை எழுப்பினார்கள். அதற்கு அண்ணா மெளனியாக இருந்து விட்டார். ‘ஒரு நாள் பழகினும் நட்புக்கு சீர்குலைவு வரக்கூடாதல்லவா? அதுதானே சான்றோர் எண்ணம்?

சென்னை இராஜா அண்ணாமலை மன்றத்திலே நடிகர் திலகம் நடிக்கும் வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்திற்கு தலைமை தாங்க வேண்டும் என்று நடத்துனர்கள் கேட்டதற்கு அறிஞர் அண்ணா ஒப்புக் கொண்டார், நாடக அரங்கிற்கு அவர் வந்து பேசிய தனது உரையில், ‘சிவாஜி கணேசன் என்ற மலர் மலர்ந்து மணம் வீசும் நேரத்தில் அவரது அருமை மணத்தை நீங்கள் நுகர்கிறீர்கள். அவர் செடியாக, அரும்பாக இருக்கும் போதே, இந்தச் செடி, அரும்பு ஒரு நாள் தமிழ்நாடு முழுவதும் மணக்கும் மலராகும் என்பதை முன்கூட்டிய நான் அறிந்தவன். ‘தம்பி’ சிவாஜிகணேசன் எங்கிருந்தாலும் வாழ்க’ என்று வாழ்த்திச் சென்றார்.

இந்தக் காட்சி, சிவாஜியை நேருக்கு நேர் கண்டு வாழ்த்தியக் காட்சி, அவர்மீது அண்ணா வைத்திருந்த கருத்தை, கண்ணோட்டத்தின் தனித்தன்மையை அன்று வெளிப்படுத்திய பேட்டி ஆகும். மாற்றான் தோட்டத்து மலரும் மணக்கும்’ என்றவரல்லவா அவர்?

எனவே, பேட்டியினால் நாட்டுக்கு பல நன்மைகள், வரலாற்றுண்மைகள், நட்பு உணர்வின் நெறிகள், இலக்கியச் சிந்தனைகள், அரசியல் தன்னடக்க உணர்வுகள்,