பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

354

நேருக்கு நேர் சந்திக்கும் கலை!


சான்றாண்மைச் சம்பவங்கள் கிடைக்கின்றன. இத்தகைய பேட்டிகள் ஏராளமாக இருக்கின்றன. அவற்றை எல்லாம் செய்தியாளர்கள் வெளிக் கொண்டு வந்து வரலாற்றில் பதிவு செய்தால், வருங்கால இளைய தலைமுறைகளுக்குரிய பாடமாக, படக் காட்சிகளாக அமையாதா?

பேட்டிகள் ஒரு செய்தியை உருவாக்க வேண்டும். பல சம்பவங்களைப் படம் பிடித்துக் காட்டுவதாய் அமைய வேண்டும். புதிய கண்டுபிடிப்பார்களது சாதனைகளைப் பேட்டி கண்டு அதன் அருமைகளைப் பொது மக்களுக்கு உணர்த்தலாம்.

விளையாட்டு வீரர்களைப் பேட்டிக் கண்டு அவர்களது ஆற்றலை உலகுக்கு வெளிப்படுத்தலாம். இவை பொது மக்களுக்குரிய வீர உணர்ச்சிகளை வளர்க்கப் பெரிதும் உதவியாக இருக்கும்.

இந்தியாவின் ஒவ்வொரு துறையிலும் புகழ் பெற்று விளங்குபவர்கள் இலை மறை காயைப் போல வாழ்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தும் பாலமாக பேட்டி விளங்க வேண்டும்.

‘சன்’ டிவியில் உங்களூர் விநோதங்கள் என்ற ஒரு பகுதி செயல்படுகிறது. அந்த டி.வி.யின் பத்து நிமிடத்தோடு அவர்களது சாதனை விவரங்கள் முடிந்து விட்ட சம்பவங்கள் அல்ல. செய்தியாளர்கள் அவர்களைத் தனியே பேட்டிக் கண்டு முழு விவரங்களையும் பத்திரிகையில் வெளியிடலாம். அதனால் அவர்களது சாதனை நோக்கம் மேலும் ஆக்கம் பெறும் வழியாக இருக்கும்.

சாலையின் ஓரத்தில் இளநீர் காய்களை வெட்டி விற்றவர் ஒருவர் சங்கத் தலைவரானார்! எப்படியானார் அவர் என்பதைத் தனி மனிதர் பேட்டியாகக் கண்டு முழு செய்தியை வெளியிடலாம். நாளை ஒரு பழ வியாபாரிகூட கனிகள் சங்கத் தலைவராக அல்லது பெரிய வணிகச் சீமானாக வரலாமில்லையா? அதைப் பேட்டியாக எடுத்து செய்தியாளர்கள் வெளியிடலாம்.

பொதுப்பணிப் பாலங்கள் கட்டும்போது செங்கல் சுமந்த ஒரு சிற்றாள், நகராட்சி கமிஷனராக உயர்கின்றார். அவர்