பக்கம்:இந்தியா எங்கே.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 163

மலை : ஆமாம். அதையும் பிடித்து விட்டோம் பொன் ; உடனே கப்பலேற்று. ஆகா விலைமதிப்பற்ற

பொக்கிஷம். மலை : அப்படியே.

வேறு காட்சி அதேபோல் தாய் வாணியம்மை வீதியெங்கும் சுற்றி அலைகிறாள். வேல்விழி என்ற சப்தத்துடன். புத்தி தன்னிலை இழந்துவிட்டது. வீரர்கள் பிடித்துச் செல்லல்.

வேறு காட்சி (கட்டுகளுடன் பொன்மேனிராயன் முன்னிலையில் நிறுத்து கிறார்கள்) மலை : அடா மடையர்களே! இந்தக் கிழவியை எந்தப் பிரபுவும் வாங்க மாட்டானடா! அதுவும் பைத்தியக்காரக் கிழவி. இவளை அடிமைச் சந்தையில் விலை கூறினால் நமக்குத்தான் செலவாகும். வெளியே துரத்தி விடுங்கள். பொன் ; மேலும் அது பல வருடங்களுக்கு முன்பே மகாப் பிரபு மாட்சிமை தங்கிய இன்பவாகனரால் சுவைத்து மீண்டும் எறியப்பட்ட வெறும் சக்கை. அதை அனுப்பி விடுங்கள் - மலை : போ! பைத்தியமே. வாணி : என் வேல்விழி! மலை : வேல்விழியா? இருபது வருடத்துக்கு முன், உன்

முகத்தில் இருந்திருக்கும். போ. வாணி : வானழகன்! மலை : வானத்திலே பறந்து தேடு அகப்படுவான். வாணி : ஆ! நான்தான் உண்மையான தாய்/ உலகறிந்த

தாய். என் மைந்தன் தான் இளவரசன்! மலை : சரி. இதோ இப்படியே போ. வேல்விழியைப்

பார்க்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/165&oldid=537731" இலிருந்து மீள்விக்கப்பட்டது