பக்கம்:இந்தியா எங்கே.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 179

பண்பட்டு விட்டேன். நானென்ன செய்வேன். என் ஆற்றலை உபயோகித்து என் கையாலேயே என் தந்தை என்பதையும் மறந்து ஒருநாள் விஷத்தையும் தந்தேன். அவர் அதைக் கண்டு பிடித்து விட்டார். அதிலிருந்து என்னை மகள் என்று அழைப்பதை மறந்ததோடு, கைதியாகவும் நடத்தி வருகிறார். நானும் ஒரு தந்தை என்ற பாசத்தைக் கடமை நெருப்பிலே வீசி எறிந்து விட்டேன். ஆயினும் என்ன? நான் எதற்காக இதை எல்லாம் செய்தேனோ அந்த மனித மாணிக்கம் எங்கோ சுரங்க இருட்டிலே மறைக்கப்பட்டு விட்டார். அந்த நரகத்திலிருந்து மீண்டு வந்த பிறகல்லவா என் உயிரைப் பெற முடியும்? அந்தோ? எனக்கு ஆறுதல் தந்து கொண்டிருந்த அப்பெண் வில்லின்யயும் என்னை விட்டுப் பிரித்து வைத்து விட்டார். வேல் : அம்மா, நீ கூறும் அந்த மனித மாணிக்கம் யார்?

சொல்லக்கூடாதா? இன்ப : சகோதரி சொல்ல நா நடுங்குகிறது. அடிமை என்ற பெயரால் இந்நாட்டு மூடர்களால் அழைக்கப்படும் ஆண்மைக் சூரியர். அவர் பெயர் வானழகர். . வேல் : ஆ.! இன்ப ஏன் ஆச்சரியம்? முன்பே அவரைத் தெரியுமா? வேல் : தெரியுமா. வா! தெரியும் அம்மா! அவர்

உன்னிடம் அடிக்கடியும் சம்பாசிப்பாரா! இன்ப ஆம் அன்பின் மொழியைக் கேட்கத் துடித்துச் சென்றபோதெல்லாம், ஆத்திர நெருப்பை அள்ளி யள்ளிக் கொட்டுவார். ஆனால், அது என்னைச் சுடவில்லை. மூண்டெரிந்த நெஞ்சத்து அன்பை மேலும் வளர்த்து அணையாத ஜோதியனலாக்கி விட்டது சகோதரி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/181&oldid=537747" இலிருந்து மீள்விக்கப்பட்டது