பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய தன் ஆற்றலிலே அளவற்ற நம்பிக்கை; அந்த ஆற்றலை வெளிப்படுத்தி வீர வெற்றிகள் பெற்றாக வேண்டும் என்ற துடிப்பு - நெப்போலியனுக்கு. 126 ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதிலே, அத்துணை வெறி என்று குற்றம் சாட்டினர், பிற்காலத்தில், நெப் போலியன் சொன்னான். "நான் ஆதிக்கம் பெற விரும்பு கிறேன் - மறுக்கவில்லை. ஆனால் எந்த முறையில், எனக்கு அந்த ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். யாழ் வாசிப்பவனுக்கு, எப்படி, யாழிடம் தனக்கு நிகரற்ற ஆதிக்கம் இருக்கவேண்டும் என்று எண்ணம் இருக் குமோ, அப்படி எனக்கு. ஆதிக்கத்தின்மீது ஆர்வம். யாழ் வல்லோன் எதற்கு விரும்புகிறான் ஆதிக்கத்தை? யாழினின் றும் எவரையும் மகிழ்விக்கவல்ல இனிய இசையை எழுப்ப! என் நோக்கமும் அஃதே போன்றதுதான். பல அரசுகளிலே ஆதிக்கம் பெற முனைகிறேன்-எதன் பொருட்டு? அமைதி நிலைத்திட, அரசு நிலைத்திட, வாழ்வு சிறந்திட, வளம் பெருகிட! மக்கள் வாழ்ந்திட!! இரத்தம் இருபது ஆண்டுகள் பொங்கிடும் விதமான போர் பல நடாத்தி, ஆட்சிகள் பலவற்றைக் கலைத்தும்: கவிழ்த்தும், ஒரு பேரரசு அமைத்திட முனைந்தது! மக்க ளுக்கு நல்வாழ்வு பெற்றளிக்க என்று கூறுவதாலேயே, இரு பது ஆண்டுகள் விளைந்த விபரீதங்களை விருந்தாக்கிக் கொண்டு விருது அளித்திட எவர் ஒப்புவர்! நெப்போலியனுடைய ஆதிக்க வேட்டைக்கு ஒரு நோக் கம்கூட இருக்கலாம் - - அந்த நோக்கம் நேர்த்தியானது என்று திறம்பட வாதிடவும் செய்யலாம். ஆனால் எத்தனை எத் தனை அழிவு, கொடுமை, இழப்பு, இடிபாடு, இடர்ப்பாடு! எல்லாம் கடைசியில் எதற்குப் பயன்பட்டது—ஒரு மாவீரன் மகத்தான வெற்றிகளை, திறமையால், உழைப்பால், திட்ட மிடுவதால் பெறமுடிந்தது என்பதை வரலாற்றுச் சுவடியிலே இணைத்துக் காட்டத்தானே! மல்லிகையின் வெண்ணிறத்தை மாற்றிக் காட்டுகிறேன் என்று சூளுரைத்து, மதலையினைக் கொன்று, அந்தக் குருதியிலே மல்லிகையைக் கொட்டி,