பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127 இருபது ஆண்டுகள் செந்நிறமேற்றிக் காட்டுவதா? இரத்தம் பொங்கிடும் இருபது ஆண்டுகள், ஒரு இலட்சிய அடிப்படையிலே மேற்கொள்ளப் பட்ட புனிதப் பணி அல்லவே அல்ல! ஆற்றலை அளவுகடந்து பெற்றவன், அவனியை அழித்தேனும், வெற்றிப் புகழ்பெற முனைந்திடும் விபரீத விளையாட்டு அது. உலகவரலாற்றிலே பல நூற்றாண்டுகளுக்கு ஒருமுறை, ஏற்படும் பூகம்பம், எரிமலை, பெரும் புயல், பெரு வெள்ளம். துவக்கத்திலேயே, நெப்போலியனுடைய போக்கைக் கூர்ந்து கவனித்தவர்கள், 'தன்னால் முடியும் என்ற எண் ணம் தடித்துப்போன நிலை இந்த வீரனுக்கு இருக்கிறது. இது மிக ஆபத்தானது. இவன் ஆட்டிப் படைத்திட, ஆதிக்கம் கொண்டு அலைந்திட முனைவாள். வருங்காலத் தினர், கொடுமையின் சின்னம், பயங்கர மனிதன் என்று கூறத்தக்க நிலைக்குச் செல்கிறான் இந்த நெப்போலியன்' என்று கூறினர். டோவ்லான் எனும் ஊரில், பிரிட்டிஷார் கோட்டை எழுப்பிக்கொண்டு, மன்னர் கட்சியை மீண்டும் பிரான்சில் புகுத்தும் முயற்சியில் ஈடுபட்டிருந்தனர். இந்த இடத்தைத் தாக்கிப் பிடித்திடுவதற்கேற்ற வழி இல்லை என்று பிரான்சுத் தளபதிகள் பலரும் கருதினர். நெப்போலியன், துணிவாகத் தாக்கி, டோவ்லானில் வெற்றி பெறமுடியும் என்று கூறி, அதற்கான திட்டம் தயா ரித்திருப்பதாகத் தெரிவித்தான். தயக்கத்துடன்தான், நெப்போலியனிடம் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. என் றாலும், வியக்கத்தக்க வெற்றியைப் பெற்றான். அஞ்சாமல் தாக்குவது, விரைவாகச் செயலாற்றுவது எனும் போக்கின் காரணமாக அந்த வெற்றி கிடைத்தது. பிரிட்டிஷாரும் அவர்களை நம்பி அங்குக் குடியேறி இருந்த பல்லாயிரவரும் பதைபதைத்துப் போயினர். அந்தப் போரிலே பெரும் படைத்தலைவன், நெப் போலியன் அல்ல.