பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தப் பதவியில் இரத்தம் பொங்கிய வேறொருவர் இருந்தார்- திட்டம் நெப்போலியனுடையது- வெற்றி பெற்றதற்குக் காரணம் திட்டம்தான் என்பது அனைவருக்கும் தெரியும் பெரும்படைத் தலைவரும் அறிவித்தார்-நெப்போலியனைப் பாராட்டினார். 128 நெப்போலியன் நாடாத்திய புயல் வேகத் தாக்குதலால் நிலைகுலைந்து போனவர்கள், பீதியுற்று, பல்வகைக் கலங்க ளேறிக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முனைந்தனர். பதினையாயிரவர், முதியவர் இளைஞர், ஆடவர் பெண்டிர், படுகாயமுற்றோர், நோய்வாய்ப்பட்டோர், பதறி ஓடுகி றார்கள் -குகளை நோக்கி! 1.J.குகளிலே ஏறுவதற்குப் போட்டி, சச்சரவு! படகுகள் கவிழ்ந்துவிட, பலர் பிணமாகி மிதக்கிறார்கள். இதற்குள் ஊரிலே ஆயுதக் கிடங்கு தீ பிடித் துக் கொள்கிறது. பெரு நெருப்பு பரவுகிறது. சிக்கினோர் கருகினர்! கட்டடங்கள் இடிபாடுகளாயின! பொருட்குளியல் சாம்பலாயிற்று! ஒருபுறம் கொந்தளிக்கும் கடல். மற்றோர் புறம் பெரு நெருப்பு - இடையிலே பீதிகொண்ட மக்கள். எதிர்பாராதிருந்த நேரத்தில் எவரும் எதிர்பார்த்திருக்க முடியாத முறையிலே தாக்குதலை நடத்தியதால் வெற்றி கிட்டியது மட்டுமல்ல, தோற்றவர்கள் நாசமாயினர். இரத் தம் பொங்கப்போகிறது, இனி இவன் தடாத்தும் போரினால் என்பதை அறிவிக்கும் எச்சரிக்கையாயிற்று டோவ்லான். நெப்போலியனுடைய புகழ் பாடலாயினர் பலரும். இடுப்பொடிந்தவர்கள் இருபது முப்பது தங்கப் பதக்கங் களை அணிந்து கொண்டு, பெரும் படைத் தலைவர்கள் எனும் பட்டம் சுமந்து கொண்டுள்ளனர் - இதோ ஓர் இளைஞன்-வீரதீரப் போர் புரிகிறான் - வெற்றிக்கான திட்டம் தருகிறான்- வெந்தழலாகிறான் எதிரிகளுக்கும்-இப் படிப் பட்டவர்கள் அல்லவோ படைகளை நடாத்திட வேண் டும் - என்று அங்காடியிலும் அலுவலகங்களிலும் பேசலாயி னர் .இனி, நெப்போலியனுக்காக, பரிந்து பேசி இடம் தே கொடுக்க, ஒருவரும் தேவை இல்லை. அவன் ஆணையின்