பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய கிடையாது. போதை தரும் பழச்சாறு பருகும்போதுகூட, இனிப்புக்காகவும் உடல் வலிவுக்காகவும்தான் பருகவேண் டுமே தவிர, உருண்டு கீழே விழவோ, உளறுமொழி பேசவோ அல்ல என்ற எண்ணததில் திராட்சை ரசத்தாலான போதை பணத்தில் நிரம்பத் தண்ணீர் கலந்துதான் பருகுவான். 138 நெப்போலியன். போரில் புதுமுறை காண்பவள் எனவே, போர் இப்போதைக்கு இல்லை என்ற எண்ணத்தில், ஏற்பாடுகளைச் சரியாகச் செய்து கொள்ளாமல், மாரி கால விடுதிகளிலே ஓய்வாக எதிரிப்படைகள் இருப்பதனை அறிந்து தாக்கி திகைக்க வைத்து வெற்றி கொள்ள இதுவே தக்க சமயம் என்று துணிந்து திட்டமிட்டு இயற்கையுடன் போராடு வதால் களைத்துக் கிடந்த தன் வீரர்களுக்கு உற்சாகமூட்டி, முன்னேறச் செய்தான். "குதிரைகள் போதுமான அளவு இல்லையே என்பார் ஒரு தளபதி. "நம்மிடம் இல்லை -- சரி; ஆனால் வேறு எங்குமா குதிரைகள் இல்லை? எங்கு இருந்தாலும் சரி, குதிரைகளைப் பிடித்து வாருங்கள்' என்று உத்திரவு கிளம்பும். நெப்போலி யனிடமிருந்து. உணவு பற்றாக்குறை, நோய்--இவைகளும் எதிரி களே! பணிந்துவிடக்கூடாது. இவைகளிடமும். தாங்கிக் கொள்ளவேண்டும்; தாக்கக் கிளம்ப வேண்டும் என்பான் நெப்போலியன். அதுபோலக் கூறிவிட்டு அலங்கார வண்டி யில் அமர்ந்துகொண்டு கேளிக்கைக்கூடம் சென்றுவிடுபவனா? இல்லை! முன். அப்படிப்பட்டவர்கள் பதவி வகித்தனர்- இவன் பிறவித் தளபதி! பதினெட்டு மணி நேரம் வேலை- களத்துக்கான எல்லாவிதமான ஏற்பாடுகளையும் கவனித் துக் கொள்கிறான்--வைரங்கள் இழைக்கப்பட்ட தங்கப்பதக் கங்கள நிரம்பிய பளபளப்பான பட்டாலான உடை அல்ல அணிந்திருப்பது, போர்த் தளபதி அணியும் உடைதான்-- படாடோபம் துளியும் இல்லை. இரவெல்லாம் வேலை செய்து விட்டு, விடியும்போது படுத்திடுவான் - தூக்கம் வருவதற்குள்,