பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் போர்முறை பற்றிய ஏதேனும் ஓர் புதிய எண்ணம் தோன் றும் - காலையில் பார்த்துக் கொள்வோம் என்று இருந்து விடுவதில்லை - உடனே கிளம்புவான், படையினருக்குக் கூற- புதிய ஏற்பாடுகளைக் கவனிக்க, 139 மகத்தான செயலை மேற்கொண்டிருக்கிறோம் என்ற உணர்வும், வெற்றி பெறத்தக்க ஆற்றலுமுள்ளவர்கள் நாம் என்ற நம்பிக்கையும், ஒரு படைக்கு வலிவான போர்க் கருவி யாகும். அழிக்கும் வலிவுகொண்டபடைக்கலன்களை குவித்து வைத்துக் கொண்டிருக்கலாம், ஆனால் உறுதியும் நம்பிக்கை யும் இல்லை என்றால் வெற்றி கிட்டாது. உறுதியும் உணர்ச் சியும் படையினர் பெறத்தக்கவிதமான செயல் வீரனாகவும் பேச்சுத்திறன் மிக்கவனாகவும் விளங்கினான் நெப்போலி யன். "தொல்லைகள் பலவற்றைத் தாங்கிக் கொண்டீர்கள், வீரர்களே! அவைகளுக்கெல்லாம் ஒரு முடிவு கட்டத் தீர் மானித்துவிட்டேன். அதோ அந்த மலைகளுக்கு அப்பால், எல்லாம் இருக்கின்றன. உணவு, உடை, பாய்ந்திடும் புரளி கள், பொன், பொருள் யாவும். எல்லாம் நமக்காக! செல் வோம், வெல்வோம், அவைகளைக் கொள்வோம். களை நாம் சந்திக்கக் கிளம்புவோம்--இடையிலே தடைகளைத் தகர்த்துவிட்டு முன்னேறி, நமது ஈட்டிமுனை களை எதிரிகளின் மார்பில் பாய்ச்சுவோம் - புறப்படுக! எதிரி எ உள்ள மாவீரன் நெப்போலியன் இதுபோல எழுச்சியூட்டி னான்? போர் வீரர்கள் எத்தகைய உணர்ச்சிவயப்பட்டிருப் பார்கள் என்பதனைக் கூறவும் வேண்டுமா? முன்னேறிச் சென்றனர் - மூடுபனிக்கு இடையே படைகள் பாய்ந்தன- எதிரிப்படை வரிசைகளைத் தாக்கினர்--நிலைகுலைந்தது-- பிணம் குவிந்தது -இரத்தம் பொங்கிற்று- வெற்றி மலர்ந் தது. நெப்போலியன் பெற்ற வெற்றி, அதைப் பெற அவன் தீட்டிய திட்டம், போர் வீரர்கள் வட்டத்திலேயே ஓர் புதிய கிலியைக் கிளப்பிவிட்டது.