பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 இரத்தம் பொங்கிய லும், நெப்போலியன் மீது படரும் குற்றம் நீங்கிவிட்டது என்று கூறமுடியாது. என்போன்ற படைத்தலைவர்கள், பலர் கொல்லப் படுவது குறித்து மிகுதியாகக் கவலைப்படுவதற்கில்லை. பலி பல தந்துதான் வெற்றி பெற்றாக வேண்டி இருக்கிறது என்று வேறோர் முறை நெப்போலியன் கருத்தறிவித்தான். இங்கு இது; அங்கு பாரிசில், நெப்போலியனுக்கு எதி ராக ஒரு சதி உருவாகிறது; அது வளருமுன் வெளிப்பட்டு விடுகிறது. அதில் ஈடுபட்டோர், சுட்டுக் கொல்லப் படுகின்றனர். எகிப்துப் படை எடுப்பு பேரிழப்பாகிவிட்டது என்ற செய்தி, பிரான்சிலே பரவி, தன் மதிப்பு மங்கி, வெறுப்பும் எதிர்ப்பும் மூண்டுவிடா முன்பு, தானே நேரிலே சென்று அங்கு நிலைமையைச் சீர்படுத்தியாக வேண்டும் என்று தோன்றிற்று. எனவே, படையினரை எகிப்தில் விட்டு விட்டு பாரிஸ் பயணமானான் நெப்போலியன். வழியிலே பிரிட் டிஷ் கடற்படை வீசிய வலையிலே விழாமல் தப்பினான்-- பாரிஸ் வந்தடைந்தான்— கண்டதும் மக்கள் மகத்தான வரவேற்பு அளித்தனர். சிரியாவிலே நேரிட்ட சீரழிவு பற்றிய செய்தி எட்டவில்லை அதுவரையில்--- எகிப்து பிடிபட்டது -பிரான்சுக்கு அடிபணிந்தது என்ற செய்தி மட்டுமே எட்டி இருந்தது. எனவே, இதோ எமது அலெக்சாண்டர்; இவர் எமது சீசர் - என்று களிப்புடன் கூவினர், கொண்டாடினர், கோலாகல விழா நடாத்தினர் பாரிஸ் மக்கள். நெப்போலியன் எகிப்து சென்று திரும்புவதற்குள், இத்தாலிய களத்திலும் ஆஸ்ட்ரியப் போரிலும் நெப்போலி