பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் யன் ஈட்டிய பெருமைகள் அத்தனையும் பாழ்படும்படியான தோல்விகள் பிரான்சுப் படைகளுக்கு அங்கெல்லாம் ஏற் பட்டு, பிரான்சின் மதிப்பு குன்றிக் கிடந்தது. வெற்றிமேல் வெற்றி பெற்றுத்தர அந்த ஒரு நெப்போலியனால் மட்டுந் தான் முடியும்; மற்றவர்கள் வெறும் ஆடம்பர உருவாரங் கள் என்று மக்கள் மனம் நொந்து பேசிக் கொண்டனர். இந்தச் சூழ்நிலையைப் பக்குவமாகப் பயன்படுத்திக் கொண்டு சய்யீஸ், டூகோஸ், பாராஸ், கோசியர், மோலீன் எனும் ஐவர் பொறுப்பாளர்களாக இருந்து நடத்திவந்த ஆட்சிக் குழுவை உருட்டி மிரட்டி, இடம் தனக்குக் கிடைக்கும்படி யாகவும், குழுவை ஆட்டிப்படைக்கும் நிலை தனக்கு ஏற் படும்படியாகவும் நெப்போலியன் செய்து கொண்டான். 165 ஐந்நூறு உறுப்பினர்கள் கொண்ட ஆட்சி மன்றத்தில், நெப்போலியனுடைய உடன்பிறந்தான் லூசியன் அவைத் தலைவராக இருந்தது, வாய்ப்பாகிவிட்டது. இரத்தம் சிந்தாதமுறையில், காற்றடித்துக் கனி காலடி வீழ்வதுபோல, ஆட்சி செய்யும் அதிகாரம் தன்னிடம் வந்து சேரத்தக்க சூழ்நிலையை உண்டாக்கினான். சர்வாதிகாரத்துக்குப் பணியமாட்டோம்! அரசியல் சட்டத்துக்கு வேட்டு வைப்பதைச் சகித்துக் கொள்ளமாட் டோம்! என்றெல்லாம். இலட்சிய முழக்கம் எழுப்பிப் பார்த் தனர் ஆட்சி மன்றத்தினர். நெப்போலியன் நடத்திய நேர்த்தி யான நாடகம் அனைவர் மனதையும் கவர்ந்துவிட்டது. படைவீரர்களும் ஆர்வம் கொந்தளிக்கும் மனத்தினரான மக்களும் நெப்போலியன் பக்கம். பொறுப்பாளர் பாராஸ் தமது செயலாளரை அனுப்பி இருந்தார், நிலைமைக்கான