பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் நெப்போலியன் எப்போதும்போல் வீரம் காட்டினான். ஆனால் ஏற்கனவே ஏற்பட்ட வடுக்கள். செயலிலே ஒரு தரக்குறைவைத் தன்னாலே ஏற்படுத்திவிட்டது. தயக்கம், குழப்பம், திகைப்பு மேலிட்டது, செயலாற்றுவதில். கணக் குத் தவறுவதில்லை, களம் பற்றிய திட்டமிடும்போது. வாடர்லூ களத்திலே, கணக்கிடுவதிலும் தவறு நேரிட்டு விட்டது. தன் படையின் ஒரு பலமான பிரிவு உடன இல்லா திருந்த சமயத்தில், எதிர்ப்படைகள் யாவும் ஓரணியாகி விட்ட நிலையில், போரைத் துவக்கினான்-தாக்குதல் திகில் கொள்ளத்தக்க வகையில். ரஷியாவில் பேரிழப்பு, லிப்சிக்கில் பெருந்தோல்வி! இப்போது மட்டும் என்ன என்று எக்களிப் புடன் நேசநாட்டுப் படைகள் போரிட்டன. இறுதி முயற்சி என்ற நினைப்புடன் நெப்போலியன். வாடர்லூவிலே வெலிங் டன் வாகை சூடினான் -- நெப்போலியன் நொந்த நிலையில், வெந்து உள்ளத்துடன் களம்விட்டுச் சென்றான், மீண்டும் முடிதுறந்திட! என் கதை முடிந்துவிட்டது; என் முயற்சி தோற்றுவிட்டது! என்று கூறவேண்டியதாகிவிட்டது. நொ போலியனை, நேச நாட்டினர், செயின்ட் எலினா தீவிலே சிறை வைத்தனர். 187 இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று இணையில்லா இந்த வீரன் நடாத்திய போர்களினால். பலன் என்ன கண்டான்? தாயும் இல்லை. மனைவி மக னும் இல்லை; தத்தளித்தான் எலினா தீவில்!