பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102 இலக்கியக் காட்சிக ள்

  1. * * * * * * * * * * * * * * .........யாம் இரப்பவை பொருளும் பொன்னும் போகமுமல்ல நின்பால் அறாளும் அன்பும் அறனு: மூன்றும் உருளிணர்க் கடம்பின் ஒலிதா ரோயே

(பரிபாடல்; 5 : 78-81)

பொருளும் பொன்னும் போகமும் வேண்டாமல் முருகப் பெருமானின் அருளையும் அறனையும் அன்பை யுமே வேண்டி நிற்கும் அளவிற்கு அவர்தம் நெஞ்சப்பாங்கு நிமிர்ந்து நிற்பதனைக் காண் கிறோம். அதுவே வாழும் நெறி; உய்யும் நெறியாம்.

இவ்வாறு உய்யும் உயர்நெறி அறிந்துணர்ந்து தெளிந்த பெரியவர் திருவாசகம் தந்த மணிவாசகப் பெருந்தகையாவர். ‘கல்லைப் பிசைந்து கனியாக்கும் விச்சை யறிந்தவர். காசிவரை சென்று சைவ சமயம் பரப்பிய குருரகுருபரரும், கற்பனைக் களஞ்சியமாம் சிவப்பிரகாசரும், தாயுமான தயாபரரும், வடலூர் வள் ளற் பெருமானும், திருவாசகத்தில் தோய்த்த நெஞ்ச முடையவர்கள் என்பது அவர்கள் பாடியுள்ள பாடல்கள் பலவற்றால் அறியலாகும். கிறித்துவ சமயத்தினையே பர ப்பத் தமிழ் நாடு போந்த டாக்டர் ஜி. யு. போப் என்னும் பாதிரியார், திருவாசகத்தில் நெஞ்சந் தோய்ந்து, அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார். திருவாச கத்தை என்புருக்கும் பாட்டு’ (Bone-melting song) என்று குறிப்பிட் டார். திருவாசகத்தில் முதலாவதாக இடம் பெற்றிருக்கும் அகவலில் வரும் இமைப் பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற தொடருக்கு இணையான கருத்தை, இறைவனைக் குறித்து வெளிப் படுத்தும் மொழி உலகில் எங்கும் காணமுடியாது எ ன் ப ர். மொழித்திறம் முட்டறுத்த மொழி நூற்