பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எங்கெழிலென் ஞாயிறு எமக்கு? 103.

புலவர்களும், ஆங்கிலம் வணிகத்தின் மொழி என்றும்’ கிரேக்கம் இசையின் மொழி என்றும், இலத்தீன் சட்டத்தின் மொழி என்றும், பிரெஞ்சு துதின் மொழி என்றும் குறிப்பிட்டு, த மி ழ் ப க் தி யி ன் மொழி (Language of Devotion) என்று குறிப்பிடுவர். அளவிலும் சுவையிலும் தமிழில் எழுந்த பக்திப் பாடல்கள் போல் வேறு எம்மொழியிலும் காண முடியாது என்பர்.

மலங்கெடுத்து மனமுருக்கும் திருவாசகம் தோத்திர நூல்களில் தலைசிறந்ததாகும். திருவாசகத்திற்கு உருகா தார் ஒருவாசகத்திற்கும் உருகார்’ என்பது பழமொழி. திருவாசகத்திலும் அதன் ஒரு பகுதியாய் அமைந்துள்ள திருவெம்பாவை பக்தியுலகில் சீரியதோர் இடத்தினைப்

பெறுகின்றது. திருப்பெருந்துறைப் புராணம்,

மலவிருளுற்று உறங்காமல்

மன்னுபரி பாகரருள்

செல முழுக வருகவெனச்

செப்பல் திரு வெம்பாவை

என்று திருவெம்பாவை உண்மையினை விளக்கி நிற்கும்.

அறிவு, அழகு, செல்வம், பண்பு, வயது, குடிப்பிறப்பு முதலிய பத்துவகை ஒப்புகளால் ஒத்த தலைவனும் தலைவியும் திருமணம் செய்துகொள்கிறார்கள். அப்போது பெண்ணைப் பெற்றவர்கள் பெண்ணை மணமகன் கையில் ஒப்படைக்கும் பொழுது, உங்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்’ என்று கூறிக் கொடுப்பர். கொடுப்பாரும் அடுப்பாரும் இன்றி ஊழ்கூட்டத் தலைவனும் தலைவியும் ஒன்றுசேர்வது பழைய காலத் திருமணமாக இருந்தது, களவின் வழிவந்த கற்பு இதுவாகும். திருமணத்தின் போது திருமண வீட்டிற் புதுமணல் பரப்பப்பட்டு, மாலை