பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் 9

தாது.ண் பறவை பேதுறல் அஞ்சி மணிகா ஆர்த்த மாண்வினைத் தேரன் உவக்காண் தோன்றும் குறும்பொறை நாடன்!

(அகம். 4:8-13)

என்பது அப் பாடல்.

எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்த காதலனும் காதலி யும் வாழ்வில் ஒன்றுபட்டனர். அவர்கள் தாய் தந்தையர் யார் யாரோ? என்று கூறுமளவிற்கு இருந்தாலும், செம்மண் பூமியில் பெய்த நீர் போல் ஒன்று கலந்து இணைந்துவிட்ட இரு நெஞ்சங்களை,

செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சங் தாங்கலங் தனவே

(குறுந். 40: 4-5)

என்ற குறுந்தொகைப் பாடற்பகுதி அருமையாகக் காட்டு கின்றது.

நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரத்தினை இயற்றிய இளங்கோவடிகள் தம் நூல் எழுந்ததற்கான காரணங் களைப் பதிகத்தில் தெளிவாகக் கூறுகின்றார் :

அரைசியல் பிழைத்தோர்க்கு அறம்கூற் றாவது உம் உரைசால் பத்தினிக்கு உயர்ந்தோர் ஏத்தலும் ஊழ்வினை உருத்துவங் தூட்டும் என்பது உம் சூழ்வினைச் சிலம்பு காரணம்.ாக

நாட்டுதும் யாம் ஓர் பாட்டுடைச் செய்யுள்

(சிலம்பு; பதிகம் : 55-60)

வழிவழி முறைகோடாது-ஒருபாற்படாது அரசு கட்டிலில் ஆட்சி ஒச்சிய பாண்டியன் நெடுஞ்செழியன் அரசியல் பிழைத்தான். ‘கோவலனைக் கொல்லக்