பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

/

10 இலக்கியக் காட்சிகள்

f

கொணர்தி என்று சொல்ல வந்தவன், ‘கொன்று கொணர்தி என வாய் சோர்ந்து கூறி விட்டான். ஆராயா மல் அவன் வழங்கிய நீதி, சாய்ந்த துலாக்கோலாகி விட்டது. அவன் சொல் அதில் தேய்ந்த படிக்கட்டாக நின்றது. எனவே உண்மை வெளியானதும்,

மன்பதை காக்குங் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுக என்னாயுள்

(சிலம்பு; வழக்குரை காதை : 76-77)

என மயங்கிக் கீழே விழுந்தான். அவன் ஆவி அவன் உடலை விட்டு நீங்கியது. அது கண்ட கோப்பெருந்தேவி யும் அரியாசனத்தினின்று கீழே விழுந்து,

கணவனை இழந்தோர்க்குக் காட்டுவதில்!

(சிலம்பு; வழக்குரை காதை : 80)

என்று கூறித் தன் உயிர்கொண்டு அவனுயிர் தேடினள் போல உயிர்விட்டாள். அரசியல் பிழைத்தோர்க்கு அறங் கூற்றாகும்’ என்ற உண்மையைப் பாண்டியன் மூலம் உணர்த்துகின்றார் ஆசிரியர்.

அடுத்து, உரைசால் பத்தினியை உயர்ந்தோர் ஏத்துவர் என்ற உண்மையைக் கண்ணகி வாழ்வின மூலம் அறிவுறுத்துகின்றார். உரைசால் பத்தினியாகிய கண்ணகி, ‘தீதிலா வடமீனின் திறம் இவள் திறம்’ என இளங்கோவடி களால் பாராட்டப் பெற்றவள். கற்பின் மிக்கெழுந்த ஆற்றலால் மதுரை நகரை எரியுண்ண வைத்தாள். பாண்டியன்தன் பதி நீங்கிச் சேரநாடு சென்று அங்கிருந்தும் வானோர் உலகு போனாள். இவள் வரலாற்றினைக் குன்றக் குறவர்கள் வாயிலாக உணர்ந்து, சேரன் செங்குட்டுவன் பத்தினிக் கடவுளுக்குரிய படிமம் சமைக்க