பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இலக்கியத்தின் நோக்கங்கள் I I

இமயத்தினின்றும் கல்கொணர்ந்து அதனைத் தன்னை இகழ்ந்த கனக விசயர் முடிமேல் ஏற்றித் தன் நாட்டில் ஒரு கோயில் எடுத்து விழாச் செய்வித்தான். இலங்கைக் கயவாகுவும் கோயில் கட்டிக் கண்ணகியாம் கற்புத் தெய்வத்தை வழி பட்டான்.

ஊழ்வினையாலே கொல்லப்பட்டான் கோவலன். கண்ணகியை விட்டு அன்புச் செல்வியாம் மாதவிபால் அன்பு பூண்டு வாழ்த்து வந்தான். ஊழ்வினை உருத்து வந்து ஊட்டிற்று. மாயப்பொய் பல கூட்டும் மாதவி’ என மயங்கி, யாழிசைமேல் வந்து விதி வலியுறுத்த, அவளை விட்டும் நீங்கினாள். அவனைப் பிரிந்த மாதவி, மாலை வாராராயினும் காலை காண்குவம்’ என நம்பி னாள். வரவில்லை அவன். இப்படிச் செல்கிறதுகதை. ஊழ்வினை உருத்து வந்துாட்டும் என்பதை இதன்மூலம் தெளிவுறுத்துகின்றார் ஆசிரியர் -

ஓரி னெய்தல் கறங்க வோரில் ஈர்ந்தண் முழவின் பாணி ததும்பப் புணர்ந்தோர் பூவணி யணியப் பிரிந்தோர் பைத லுண்கண் பணிவார் புறைப்பப் படைத்தோன் மன்றவப் பண்பி லாளன்

(புறம்; 194 : 1-5)

என்ற புறநானூற்றுப் பாடலில் பக்குடுக்கை நன்கணியார் வாழ்க்கையை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றார்.

அடப்பண்ணி வைத்தார் அடிசிலை யுண்டார் மடக்கொடி யாரொடு மங் தணங் கொண்டார் இடப்பக்க மேஇறை கொந்தது என்றார் கிடக்கப் படுத்தார் கிடங்தொழிங் தாரே

(திருமந்திரம் : 192)

என்ற திருமந்திரப் பாடலும் வாழ்க்கை நிலையை-நிலை யாமையை உணர்த்தி நிற்கின்றது.