பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

இலக்கியக் காட்சிகள்


இப்படிச் சில வாழ்க்கை உண்மைகளைக் காட்டி வாழ்க்கையை விளக்குவதோடு மட்டும் அமைந்து விடாமல், அவ் வாழ்க்கையை நெறிப்படுத்தும் வழிகளைக் கூறிச் செல்லும் சிறப்பினையும் இலக்கியங்கள் பெற்றுத் துலங்குகின்றன.

இலக்கியமும் நெறிப்படுத்துதலும்

ஒவ்வொரு காலத்தில் தோன்றிய இலக்கியங்களும் வாழ்க்கையை நெறிப்படுத்துகின்ற வகையிலேதான் அமைந்து காணப்படுகின்றன. சங்க இலக்கியங்களில் புற நானுாற்றுப் பாடல்கள் சில அறங்களை நேரடியாக உணர்த்திச் செல்கின்றன. அகப்பாடல்கள் நேரடியாக நெறிப்படுத்துவனவாக அமையவில்லை. ஆனால் அவை, தம்மைச் சுவைக்கும் சுவைஞர்கள் நெறிப்படுகின்ற வகை யில் சீர்மையுடன் துலங்குகின்றன.

ஒன்றன் கூறாடை யுடுப்பவரே யாயினும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை

(கலி; 18 : 10 -11) என்ற கலிப்பாடல் அடிகள் வாழ்வில் ஈடுபடும் இருவருக்கு

அவர்தம் உள்ள இணைவே வாழ்வில் வெற்றியைத் தேடித் தரும் என்பதை அன்றோ உணர்த்தி நிற்கின்றன?

அன்புடைக் கணவர் அழிதகச் செயினும் பெண்பிறந் தார்க்குப் பொறையே பெருமை

(பெருங்கதை)

இன்னா செயினும் இனிதுதலை யளிப்பினும் நின்வரைப் பினளென் தோழி

(குறுந். 397 : 6-8)