பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

140

இலக்கியக் காட்சிகள்


கலையுறு ஞானியர் பகர்ந்த கட்டுரை சிலையுறு பங்தெனத் திரும்பிற் றென்பவே’

(шт. ст. 574) கற்பனைச் சிறப்பு

கற்பனை , காவியத்தை கற்பவர் கண்முன் நிகழ்ச்சி களைக் கொண்டு நிறுத்தவல்ல பேராற்றல் வாய்ந்ததாகும்; தன் குறிப்பு தோன்றவும், உயர்வு நவிற்சியாகவும் இலக்கிய ஆசிரியன் படைக்கும் கற்பனை, காவியத்தைக் கற்பவரைப் பெரிதும் மகிழ வைக்கும். அத்தகு கற்பனைகளும் சிறப்புற இரட்சணிய யாத்திரிகத்தில் அமைந்துள. -

இயல்பாக மலர்களில் தேன்சொரியும் காட்சியினை, ஆசிரியர், இயேசு பெருமான் பெறவிருக்கும் துன்பத்தை எண்ணி அவை அழுவதாகக் கற்பனை செய்வது கற்கையில் இன்பம் செய்கிறது, அப் பாடல் வருமாறு: -

செழுமலர்ச் சோலை ஓங்கும்

சினைதொரும் நிறையப் பூத்த கொழுமுகை அவிழ்ந்து செந்தேன்

குளிர்ங்றுங் துளிவார் காட்சி அழகிய மணவா ளன்.தன்

அகத்துவங் தடையும் ஆன்மக் கழிதுயர்க்கு இரங்கிச் சிந்தும்

கண்ணின்கீர்த் தாரை போலும்!’

(பா. எ. 304) என்பதாகும்.

மாலையில் சூரியன் இயல்பாக மறையும் நிகழ்ச்சி மேல், ஆசிரியர் தம் குறிப்பை ஏற்றிக் கற்பனை செய் கிறார்; இயேசு சிலுவையில் அறையப்பட்ட கொடுமை காணப் பொறுக்காமல் கதிரவன் மறைந்தான் எனக் கூறியுள்ளார். * -- *