பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரட்சணிய யாத்திரிகத்தின் இலக்கியச் சிறப்பு 141

‘பொங்கு அருள் நாதன் பூதல இரட்சை புரிவான்வந்து

அங்கம்வ ருந்தி ஆருயிர் கல்கி அவனிக்குள் மங்கிஅ டங்கக் கண்டுச் சிக்கமாட்டான் போல்

வெங்கதிர் உட்கிக் குடகல லிற்குப் புறவீழ்ந்தான்’ (பா. எ. 357)

மாயாபுரியின் கொடிகள் அசைவதன்மேல் ஆசிரியர் ஏற்றியுள்ள கற்பனை, இளங்கோ, கம்பரை அடியொற்றிச் செய்ததாயினும் மிகச் சிறந்த கற்பனையாகும். மாயாபுரி யில் மிகுதியும் சிற்றின்பம் நுகர மக்களைக் கொடிகள் அழைக்கின்றன என்கின்றார் ஆசிரியர்:

‘மோகம் மல்குமா யாபுரி மூதெயில் முயங்கும் வாகை நீள்கொடிக் குலங்கள்விண் துயல்வரும் மரபு மாகம் வேட்டுழல் மதியிலிர் வரம்பில் சிற் றின்ப போகம் உண்டு இவண் வம்மின்; என்றழைப்பது

போலும்.’ (ப. எ. 535)

இத்தகைய சிறந்த கற்பனை சான்ற கவிதைகள், இக் காவியத்துள் மிகப்பல உள.

தமிழ்ச்சுவை நிரம்பிய கிறித்தவ இலக்கியம்

தமிழ் இலக்கியங்களில் கற்றுத் தேர்ந்த சிறப்புடையவ ரான கிருஷ்ணபிள்ளை அவர்கள் இரட்சணிய யாத்திரிகத் தைத் தமிழ்க் காப்பியமாகவே செய்துள்ளார். குறள்களை எடுத்தாண்டிருப்பதும், கம்பராமாயண, தேவார, மற்றும் கலிங்கத்துப்பரணி இலக்கியங்களை அடியொற்றியிருப் பதும் இரட்சணிய யாத்திரிகத்திற்குச் சிறப்புச் செய் கின்றன.

“அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்

என்பும் உரியர் பிறர்க்கு.’

(குறள் : 72)

என்ற குறளை,