பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142

இலக்கியக் காட்சிகள்


‘அன்பிலர்த மக்குரியர் அன்புடையார் ஆக்கை என்பும்உரி யார்பிறர்க்கு என்னும் உரை எம்மான் தன்புடைய லாது எவரில் சான்றுபடு மாயின் முன்புமிலை மூதுலகின் பின்புமிலை மாதோ...’

(பா. எ. 313)

எனவரும் பாடலிலும்,

செய்தக்க அல்ல செயக்கெடுஞ் செய்தக்க செய்யாமை யானுங் கெடும்’

(குறள், 476) என்ற குறளை,

‘செய்ய அல்லசெ யக்கெடும் செய்வன் செய்ய லாமையி னும்கெடும் தேர்கஎன வைய கத்துகல் நீதிவ குக்குமால்’

(பா. எ. 422)

என்பதிலும் ஆசிரியர் பொருத்தமுற எடுத்தாண்டுள்ளார்.

ஆசிரியர் தாமே கூறியுள்ள உரையொன்றில் கம்ப ராமாயணத்தை அடியொற்றியே இக் காவியத்தைச் செய் திருப்பது தெளிவாகும். கம்பராமாயணத்தின் மூன்றாவது காண்டமாகிய ஆரணிய காண்டத்தின் பெயரையே, தம் காவியத்தின் மூன்றாவது காண்டத்திற்கும் பெயராக இட்டிருக்கிறார்.

‘உலகம் யாவையும் த ா மு ள வாக்கலும் எனத் தொடங்கும் கம்ப இராமாயண இறைவணக்கப் பாடலை அடியொற்றி ஆசிரியர் செய்துள்ள,

‘உலகம் யாவும் புரந்தருள் உன்னதர் அலகில் சோதி அருட்கடல் ஆரணத்து இலகு மெய்த்திரி யேகர் பதத்துணை குலவி என்நெஞ் சிடங்குடி கொண்டவே’

(பா. எ. 1)