பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

இலக்கியக் காட்சிகள்


வணிகர் சால்பு

இத்தகு வணிகத்தினை மேற்கொண்டிருந்த பெரு மக்கள் உண்மையே பேசும் நற்பண்பு மிக்கவர். தமக்குக் கிடைக்கும் இலாபத்தை வெளிப்படையாகக் குறிப்பிடுவர்; பிறர் பொருளை மிகுதியாகக் கொள்ளாமலும், தாம் விற்கும் பண்டங்களைக் குறைத்துக் கொடாமலும் நடுவு நிலைமை சான்ற நெஞ்சுடன் வாணிகம் செய்வர். இவ்வாறு வணிகரைய் பற்றிப் பட்டினப்பாலை சிறப் பாகக் குறிப்பிடுகின்றது.

நெடுநுகத்துப் பகல்போல நடுவுநின்ற நன்நெஞ்சினோர் வடுவஞ்சி வாய்மொழிந்து தமவும் பிறவு மொப்ப காடிக் கொள்வதுஉ மிகை கொளாது கொடுப்பதுது உங் குறைகொடாது பல்பண்டம் பகர்ந்து வீசும்.”

மதுரைக் காஞ்சியும் இத்தகு மாண்புடைய வணிகரை மானச் சிறப்பித்துப் பேசும்.

அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி.”

பல நாட்டோடும் தமிழர் பாங்குற நடாத்திய வாணிபத்தினை,

வேறுபல் நாட்டுக் கால்தர வந்த - تقتات التتة

பலவுறு பண்ணியம் இழிதரு நிலவுமணல்”

என்று நக்கீரனாரும்,

30. பட்டினப் பாலை : 206-211 31. மதுரைக் காஞ்சி : 500 32. நற்றிணை : 31 : 8-9