பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடலும் கலமும் 37

வேறுபல் காட்டுக் கால்தர வங்த பலவினை நாவாய் தோன்றும் பெருந்துறை”

என்று ஒளவையும் குறிப்பிடுவர். கப்பல் கவிழப் பலகை யைப் பிடித்து உயிர்தப்பும் செய்தினைக் கொற்றனார் என்னும் புலவர் நற்றிணைப் பாடலொன்றில் பின்வரு மாறு குறிப்பிட்டுள்ளார்:

கடல்மரம் கவிழ்ந்தெனக் கலங்கி உடன் வீழ்பு பலர்கொள் பலகை போல**

முடிவுரை

இதுகாறும் கூறியவற்றால் பண்டைக் காலத்தே தமிழர் கலம் செலுத்தி வாணிகம போற்றி வளம்பல சேர்த்து வாழ்வாங்கு வாழ்ந்தனர் என்ற செய்தி விளக்க முறக் காணலாம். --- -

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின்’

என்ற பொய்யாமொழியின் கூற்றிற்கிணங்கத் தமிழ் வணிகர் அறநெறி போற்றிய மேம்படு வாழ்க்கை வாழ்ந் தனர் என்பதும் புலப்படும்.

33. நற்றினை : 295 : 5-6 34. நற்றிணை : 30 : 8-9. 35. திருக்குறள் : 120