பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாடக இலக்கியம் 67

எனவே, சிலப்பதிகார காலத்தில் நாடகம் என்ற சொல் நாட்டியத்தையும் குறித்து நின்றதனை அறியலாம். சிலப் பதிக்கார உரையாசிரியர் அடியார்க்கு நல்லார் தம் உரையில், ‘நாடகத்தமிழ் நூலாகிய பரதம், அகத்தியம் முதலிய தொன்னுால்களும் இறந்தன. பின்னும் முறுவல். சயந்தம், குணநூல், செயிற்றிய மென்பனவற்றுள்ளும் ஒருசார் சூத்திரங்கள் நடக்கின்ற அத்துணையல்லது முதல் நடு இறுதி காணாமையின் அவையும் இறந்தன போலும் என்று மறைந்த நாடகத் தமிழ் நூல்களின் பெயர்களைக் குறிப்பிட்டுள்ளார். மேலும், அடி யார்க்கு நல்லார் தம்முடைய காலத்தில் வழங்கிவந்த நூல்களாகத் தெரிவித்துள்ள இசை நுணுக்கம், இந்திர காளியம், பஞ்ச மரபு, பரத சேனாபதியம், மதிவாணர் நாடகத் தமிழ் நூல் முதலியனவுங்கூட இக்காலத்துக் கிடைக்கவில்லை.

சிலப்பதிதாரத்தில் குறிப்பிடப்பெறும் நாடக மடந் தையர் ஆடரங்கு ஒரு முக எழினி, பொருமுக எழினி, கரந்துவரல் எழினி என்னும் முத்திறத்தவான திரைச் சீலைகள், தூண் நிழல் அரங்கினுள் விழுந்து நாடகத்தில் பங்கு கொள்வோரை மறைத்து விடாமலிருக்க விளக்கு களை அமைத்தல் முதலிய செய்திகள் எல்லாம், நாடகக் கலை சிலப்பதிகார காலத்தில் சிறப்புற்றிருந்த நிலை

யினைக் காட்டும். கூத்தச் சாக்கையன் ஆடிய கூத்தினை,

திருநிலைச் சேவடிச் சிலம்புவாய் புலம்பவும் பரிதரு செங்கையிற் படுபறை ஆர்ப்பவும் செங்கண் ஆயிரம் திருக்குறிப் பருளவும் செஞ்சடை சென்று திசைமுகம் அலம்பவும் பாடகம் பதையாது சூடகங் துளங்காது மேகலை யொலியாது மென்முலை யசையாது வார்குழை யாடாது மணிக்குழ லவிழாது