பக்கம்:இலக்கியக் காட்சிகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 இலக்கியக் காட்சி

உமையவ ளொருதிற னாக வோங்கிய இமையவ னாடிய கொட்டிச் சேதம்’

(சிலப்பதிகாரம், நடுகற்காதை : 67-75.)

என்று உமையம்மையோடு சிவபிரான் ஆடிய கூத்தாகச் சொல்லப்பட்டிருப்பது கொண்டும், (அந்தச் சாக்கையர் குலம் இன்றும் கேரளாவில் வாழ்கிறது) கூத்துத் தமிழின் சிறப்பினை உணரலாம்.

இடைக் காலத்தில்

‘நாடகத்தால் உன்னடியார் போல் நடித்து’ என்று மணிவாசகப் பெருந்தகையார் தம் திருவாசகத்தில் ஒரிடத் தில் குறிப்பிட்டுள்ளார். இங்கு நாடகம்’ என்ற சொல், நடித்தல், விளையாட் டு என்ற பொருளில் வந்துள்ளது. சீவகசிந்தாமணியில்,

பண்கனியப்பரு கிப்பயன் நாடகம் கண்கனியக் கவர்ந்துண்டு

(சீவகசிந்தாமணி-நாமகள் இலம்பகம்-230.)

என வரூஉந் தொடரில் பயன் நாடகம்’ எனவும், கண் கனியக் கவர்ந்துண்டு எனவும் வருவது கொண்டு நாடகத் த மி ழ் கா ப் பி ய காலத்தில் பெற்றிருந்த சிறப்பினை யறியலாம்.

மேலும், உரையாசிரியர் என வழங்கப்பெறும் இளம் பூரண அடிகள், நாடக வழக்கினும் உலகியல் வழக் கினும் என்னும் நூற்பாவிற்கு உரை விரிக்கும்பொழுது,

நாடக வழக்காவது, சுவைபடவருவன வெல் லாம் ஒரிடத்து வந்தனவாகத் தொகுத்துக் கூறுதல். அஃதாவது செல்வத்தாலும், குலத் தாலும், ஒழுக்கத்தாலும், அன்பினாலும் ஒத்தார்