பக்கம்:இலக்கியக் கேணி.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ்

41


முருகப்பெருமானைத் தமிழாற் பாடியவர் பலர் என்பது 'வழுவறு தமிழ்ப் பனுவல் முறை முறை யுரைத்து வெகு வரகவிஞர் உட்குழைய...... சிறுபறை முழக்கி யருளே' என்ற 81 ஆம் பாடற் பகுதியால் அறியப்பெறும்.

'பாவாணர் மங்கலக் கவி வாழி பாடிப் பரிந்து திண்டிமம் முழக்க' (செ. 77) பண்டரு பெருங்கவிப் புலமைக்கு நீ சொன்னபடி திண்டிமம் கொட்ட (செ. 32) என்ற பாடற் பகுதிகளில் திண்டிமம் என்ற ஒரு வாத்தியம் குறிக்கப் பெற்றுள்ளது. இவ்வடிகளினின்று ' பகழிக் கூத்தர் காலத்தே அக்கடவுளதருளாற் பெற்ற திண்டிம வாத்தியத்தைத் தம் பெருங்கவிப் புலமைக் கறிகுறியாக முழக்கிக் கொண்டு சீரிய கவிஞர் சிலர் திருச்செந்துார்க் கடவுள் திருமுன்பு மங்கலக்கவி பாடி வந்தனர் ' என்றறியலாம். அன்றியும் இவற்றால் திண்டிம வாத்தியம் ஆசுகவி பாடவல்ல புலவரால் தம் புலமைக் கறிகுறியாகக் கொள்ளப்பட்ட தொன்று என்றும், அதனை அக்கவி பாடா கின்றே ஒலிப்பிப்பது வழக்கம் என்பதும் அறியப்படும்.'பண்தரு பெருங்கவி ' என்றதனால் ஓசை யின்பமும் நீட்சியமுடைய சந்தக் கவிகளாக அவற்றைக் கொள்ளுதல் பொருந்தும். அத்தகைய திண்டிம கவியாகப் பகழிக் கூத்தராற் சிறப்பிக்கப் பெற்றோர் அருணகிரிநாதரே' என்று சாலனத் தமிழ்க்கவி சரிதத்தில் (பக்கம் 129-130) மு.ரா. எழுதியுள்ளார்.

முருகப் பெருமான் முத்தொழிலும் செய்பவர் என்பது, " அகலிடத்தை யடையவே படைத்தும் படைத்தபடி யளித்தும் துடைத்தும் முத்தொழிலும்