பக்கம்:இலக்கியக் கேணி.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

இலக்கியக்கேணி

கூடும் பெருமை யுனக்குளது' என்ற 87 ஆம் செய்யுட் பகுதியிற் காணலாம்.

உமையம்மையார் இழைத்த சிற்றில் இன்னது என்பதைப் பின்வரும் (88ஆம்) செய்யுளிற் கூறப் பெற்றது :-

      புற்றி லரவந் தனைப்புனேந்த
          புனிதருடனே வீற்றிருக்கப்
      பொலியுந் திகிரி வாளகிரிப்
          பொருப்பை வளர்த்துச் சுவராக்கிச்
     சுற்றில் வளர்ந்த வரையனைத்துஞ் 
          சுவர்க்கா லாக்கிச், சுடரிரவி 
     தோன்றி மறையுஞ் சுருப்பைவெளி
         தொறுந்தோ ரணக்கா லெனநாட்டி,
      மற்றி லுவமை யெனுங்கணக
           வரையைத் துளைத்து வழியாக்கி, 
      மாக முகில விதானமென
           வகுத்து, மடவா ருடன்கூடிச்
      சிற்றி லிழைத்த பெருமாட்டி
          சிறுவா சிற்றில் சிதையேலே 
      திரைமுத் தெரியுஞ் திருச்செந்துார்ச் 
          செல்வா சிற்றில் சிதையேலே.

முருகன் இன்ன தன்மையன் என்பது 98ஆம் பாட்டில் கூறப்பட்டது. அது வருமாறு:-

     ஆதிநூன் மரபாகி, யதனுறும் பொருளாகி,
          அல்லவை யனேத்து மாகி, 
     அளவினுக் களவாகி, அனுவினுக் கணுவாய்,
          அனத்துயிரு மாகி, அதனின்