பக்கம்:இலக்கியக் கேணி.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

இலக்கியக்கேணி

 பிள்ளைத் தமிழ்ப் பருவப் பெயர்களுள் சில ஒரு பாட்டில் (89) கூறப் பெற்றுள்ளன. அப்பாடற் பகுதி வருமாறு:-

          மிஞ்சுங் கனக மணித்தொட்டின்
             மீதே யிருத்தித் தால்உரைத்து 
          வேண்டும் ப்டிசப் பாணிகொட்டி
             விருப்பாய் முத்தந் தனக்கேட்டு
          நெஞ்சு மகிழ வரவழைத்து
              நிலவை வருவாய் எனப்புகன்று 
          நித்த லுனது பணிவிடையி
              னிலைமை குலையே நீயறிவாய்.


இனி இப்பாடலில் எஞ்சியுள்ள அடிகளில் எண்ணலங்காரம் பயின்றமை காண்க:-

         பிஞ்சு மதியின் ஒருமருப்புப்
             பிறங்கும் இருதாள் கவுட்சுவடு 
          பிழியுங் கரட மும்மதத்துப்
             பெருத்த நால்வாய்த் திருத்த மிகு 
          அஞ்சு கரக்குஞ் சரத்துணையே.

திருமால்பற்றிய செய்திகள் பல இந்நூலிற் கூறப் பெற்றுள்ளன: ஏறு தழுவியது: குருந்தொசித்தது: குழலூதிப் பசுக் கூட்டங்களை மேய்த்தது: கஜேந்திர அக்கு முத்தியளித்தது (செ. 71); பார்த்தனுக்குச் சாரதியானது (செ. 74); இடையர் மனையில் தயிர் வெண்ணெய் திருடியுண்டது; சகடுருட்டியது (செ. 95) என்பனவாம் .