பக்கம்:இலக்கியக் கேணி.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருச்செந்துார்ப் பிள்ளைத் தமிழ்

47


வடசொல்லாட்சி: மந்த்ரசாலை (செ. 85), ப்ரசண்டம் (செ. 8) முதலிய வடமொழிக் கூட்டெழுத்துக்களை ஆளும் முறை இந்நூலிற் காணலாம்.

ஆசிரியர்க்கு முருகன் மாட்டுள்ள மீளா அன்பை ஆவித் துணையே வழியடிமை” (செ. 92), 'காப்பான் அழிக்கத் தொடங்கில் எங்கள் கவலை எவரோடினி யுரைப்போம் ஐயா உனது வழியடிமை' (செ. 93) என்ற பாடற் பகுதிகள் வலியுறுத்தும்.

'பரிந்து மகிழ்ந்து வரவழைத்தால் வாராதிருக்க வழக்குண்டோ' என்பது படித்து மகிழத் தக்கது.

எங்கும் செந்தமிழ் மணக்கும் என்பது பின்வருஞ் (96 ஆம்) செய்யுளால் அறியலாம்:

        கொந்தவிழ் தடஞ்சாரல் மலயமால் வரைநெடுங்
             குடுமியில் வளர்ந்த தெய்வக்
        கொழுந்தென்ற லங்கன்றும், ஆடகப் பசுநிறங்
             கொண்டுவிளே யும்பரு வரைச்
       சந்தன. நெடுந்தரு மலர்ப்பொதும் பரும்,இயல்
           தண்பொருநை மாநதி யும், அத்
       தண்பொருநை பாயவிளே சாலிநெற் குலையும், அச்
           சாலிநெற் குலேப டர்ந்து
     முந்தவிளே யும்பரு முளிக்கரும் பும்,பரு
         முளிக்கரும் பைக்க றித்து 
     முலேநெறிக் கும்புனிற் றெருமைவா யும்,சிறுவர்
         மொழியும், பரந்த வழியும், 
     செந்தமிழ் மணக்கும் திருச்செந்தில் வேலனே
          சிறுதே ருருட்டி யருளே
      சேவற் பதாகைக் குமாரகம் பீரனே
           சிறுதே ருருட்டி யருளே.