பக்கம்:இலக்கியச்சுவை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

15 செயற்கைச் சந்திரன் போர்வெறி கொண்ட ஒரு கூட்டம் தளபதிகளால் படைத்துப் பறக்கவிடப்பட்டதன்று அது. 'விஞ்ஞானமே எதிர்காலம்' என்ற உணர்ச்சியும் ஊக்கமும் கொண்ட ஒரு நாட்டு மக்களால் படைக்கப் பட்டதாகும். 1760- ல் நமது நாட்டில் (பிரிட்டனில்) இருந்த நிலையும், இன்று சோவியத் யூனியனில் காணப்படும் சூழ் நிலையுமான சிறந்த சூழ்நிலை இன்று நம்மிடம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன். விஞ்ஞானம் நமக்குரியது என்ற உணர்ச்சி சமுதாயம் முழுவதிலும் கோடானு கோடி மக்களிடம் பரவிப் படர்ந்து கிடந்ததுதான் அந்தச் சூழ் நிலை. செயற்கைச் சந்திரன் ஒரு சிறிய வறண்ட தொழிற் கலைக் குழுவின் படைப்பு அல்ல. கணிதக் கலையின் அழகில் தொக்கிக் கிடைக்கும் மக்களால் பிணைக்கப் பட்டது அது' 99 "உலகத்திற்கு நாம் உரியவர்கள் என்ற உணர்வு கொண்ட ஒரு மகத்தான நாட்டின் மக்கள்தான் உலகத் தைச் சுற்றிவர செயற்கைக் கிரகத்தை அனுப்பியிருக் கிறார்கள். ரஷ்யப் பெருமக்களை இந்த உணர்வுதா இயக்குகிறது. நாமும் அவர்களின் வழியில் இந்த உணர்வைப் பெற்றாக வேண்டும். வருங்காலக் குடிமக்களாகிய மாணவ மாணவிகள் சரித்திர, இலக்கிய அறிவைப் பெறுவது போன்று விஞ்ஞான அறிவிலும் திளைக்க வேண்டும் என்பது எனது வேணவா. 17 ஜனநாயகம் அறியாமையில் மூழ்கிக் கிடைக்கும் மக்க ளிடம் தழைக்காது! அணுவைப் பற்றியும் அணுக்கருவைப் பற்றியும் அறியாதவர்கள் கருவிழி, நீலவிழிக் குழந்தை களின் படிப்புக்கான பாரம்பரிய உண்மையை அறியாத வர்கள் இவர்களைப் போன்றோர்கள் இன்று அறியாமை யில் மூழ்கிக் கிடப்பவர்களாகக் கருதப்படுவார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/19&oldid=1480287" இலிருந்து மீள்விக்கப்பட்டது