பக்கம்:இலக்கியச்சுவை.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

16 டாக்டர் புரோனோவஸ்கி' மனித வர்க்கத்தின் வாழ்க் கையில் இன்று உருவாகிவிட்ட புதிய சூழ்நிலையையும் புதிய கடமையையும் "பிரிட்டிஷ் மாணவ மாணவிகளுக்குத் தான் பேசினார். என்றாலும் அந்தக் கருத்துரைகள் தமிழ் மாணவ மாணவிகள் உட்பட உலகம் முழுவதிலும் உள்ள மாணவிகளுக்கும் பொருந்தும் என்பதுதான் எனது உறுதியான முடிவாகும். 34 இதையடுத்து பண்டிதநேரு செயற்கைக் கிரகயுகம், என்று கூறிய கருத்தும், உலக சமய மாநாட்டில் நமது உதவி ஜனாதிபதி டாக்டர் ராதா கிருஷ்ணன் விஞ்ஞானத்தை ஆதார சுருதியாகக் கொள்ளாத எந்தச் சமயமும் இனிநிலைத்து நிற்க முடியாது' என்ற கருத்தும் என சிந்தனையில் பட்டுத் தெறித்தன. ல நாட்களுக்கு முன்பு நமது தலைநகரில் நடைபெற்ற ந்திய விஞ்ஞான காங்கிரஸின் துவக்க உரையில் இந்திய லைமை அமைச்சர் 'வேதகால ரிஷிகள் போன்றும், முனிபுங்கவர் போன்றும் விஞ்ஞானிகள் தங்களது மனப்பாங் கையும் குறிக்கோளையும் அமைத்துக் கொள்ள வேண்டும்" என்று கூறிய அறிவுரை என் எண்ணத்தைத் தடவிற்று. உட.. னேயே, சோவியத் யூனியன், சிறந்த தமிழனும் உலக புகழ் விஞ்ஞானப் பெருந்தகையுமான டாக்டர் சி.வி. ராமனுக்கு சமாதானப் பரிசு வழங்கி பெருமதிப்பு சூட்டிய நிகழ்ச்சி எனது நெஞ்சைக் கவ்விற்று விஞ்ஞானத்துறை வில் இன்று உலகத் தலைமை வகிக்கும் சோவியத் யூனியன் எந்தத் திசைக்கு மாலையிட்டு வணங்குகிறது என்பதை யும், அந்த மகத்தான பெரும் நாட்டின் அதிசயத்துரித முன் னற்றம் பொது மக்களின் படைப்பாற்றலை கட்டவிழ்த்து விட்டு விஞ்ஞான அறிவை சமுதாய ரீதியில் புகட்டி தொழில் நிபுணர்களை, பொறியியல் வல்லவர்களை (இஞ்சினியர் களை) ஆசிரியர்களை, கலைஞர்களை, விஞ்ஞானிகளை இலட்சோப லட்சக் கணக்கில் படைத்திருப்பதில் அடங்கிக் கிடைக்கிறது என்று அன்று இலக்கிய மாமேதை மாக்சிம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/20&oldid=1480288" இலிருந்து மீள்விக்கப்பட்டது