பக்கம்:இலக்கியச்சுவை.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21

________________

20 லுள்ள கருத்தோட்டம் வேறு; இந்த நாடகத்தில் காணக் கிடக்கும் கற்பனைகளும் கருத்துக்களும் வேறு. சயல் உருவத்திலும் உள்ளடக்கத்திலும் குறிப்பிடத்தக்க முன் னற்றம் காணப்படுகிறது. அம்மானைப் பாடலை எடுத்து அபிமன்யூ நாடகமாக அருளியது முன்னேற்றமான தான் என்று சொல்வதற்குத் தயக்கம் வேண்டியதில்லை. இனி சுவாமிகளுடைய நடிப்புத் திறனை கவனிப்போம். இதில்தான் சுவாமிகளுடைய உணர்ச்சி வேகத்தை பாவனா சக்தியைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. எமன், இரணியன், சனீசுவர பகவான், காளபைரவர், கடோத்கஜன், முதலிய வேஷங்களில் நிகரற்ற விதமாக சுவாமிகள் நடித்திருக்கிறார். ஒருமுறை சுவாமிகள் சத்யவான்--சாவித்திரி நாடகத் தில் எமன் வேடம் தாங்கி நடித்தாராம். நடித்தபோது கையிலிருந்த சூலாயுதத்தை அதி ஆவேசத்தோ ஓங்கித் தரையில் அடித்தாராம். உண்மையாகவே தன் விளை வாக அவையிலிருந்த ஒரு தாய்க்கு "கருச் சிதைவு’" ஏற்பட்டு விட்டதாம். அதிலிருந்து ஸ்வாமிகள் எமன் வேடம் பூண்டு வருகிறார் என்றால் அந்தக் காட்சி ஆரம் பிக்கு முன்பே, "சுவாமிகள் எமன் வேடத்தில் வரப்போகி றார். கர்ப்பிணிகலிருந்தால் சபையை விட்டு வெளியே போய்விடுங்கள். இந்தக் காட்சி முடிந்த பிறகு திரும்பி வாருங்கள் " என்று கேட்டுக் கொள்வார்களாம். இரணியனாக பிரகலாதன் நாடகத்தில் நடித்தபோது ஒரு தடவை பிரகலாதனாக நடித்த சிறுவனைத் தமது வல் கையால் தூக்கிக் கீழே எறிந்து கர்ஜித்தாராம். கூட்டத்திலிருந்த ஒரு அம்மையார் "ஐயோ பாவி குழந்தை யைக் கொன்று போட்டானே" என்று அலறி மூர்ச்சை, போட்டு விழுந்து விட்டார்களாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/24&oldid=1480292" இலிருந்து மீள்விக்கப்பட்டது