பக்கம்:இலக்கியச்சுவை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

74

பண்பட. துடிதுடிக்கும்‌ ஒவ்வொரு தமிழ்‌ மகன்‌ தமிழ்‌ மகள்‌ கையையும்‌ இந்நூல்‌ அணிபெறச்‌ செய்ய வேண்டுமென்பது நமது விருப்பம்‌, மதிப்புமிக்க குறள்‌ ஆராய்ச்சியாளர்கள்‌

இந்நூலைப்‌ பற்றிய தங்களின்‌

மதிப்பீட்டைத்‌

தெரிவிக்க

வேண்டுமென்பது நமது பணிவான கோரிக்கை. இந்த ஆண்டைய வள்ளுவர்‌ விழா சென்ற ஆண்டை விட தமிழர்களிடம்‌ சிறப்பெய்தும்‌ என்பதில்‌ துளியும்‌ ஐய மில்லை. இவ்விமாக்‌ கோலத்தில்‌ இந்நூல்‌ தமிழ்ப்‌ பெரு மக்களின்‌ கவனத்திற்கு வரட்டும்‌.

இறுதியாக ஒரு சொல்‌, இந்நூலிள்‌ ஆசிரியர்‌ சாமி சிதம்பரனாரை தமிழுலகம்‌ நன்கறியும்‌. அவர்‌ தமிழ்ப்‌ பேரறிஞர்‌. பன்றூற்களின்‌ ஆசிரியர்‌. அது மட்டுமல்ல அவர்‌ சென்ற 30 ஆண்டுகளுக்கு மேலாகவே தமிழனுடைய சகல முற்போக்குத்‌ துறைகளிலும்‌ ஈடுபட்டுப்‌ பணி

புரிந்து

வரும்‌ சிறந்த எழுத்துக்‌ கலைஞர்‌. அவர்‌

அண்மையில்‌,

“தொல்காப்பியத்‌

தமிழன்‌”?

வள்ளுவர்‌ வாழ்ந்த தமிழகம்‌ இன்னும்‌ பத்துப்‌ பாட்டு எட்டுத்தொகை பற்றிய ஆய்வு நூற்கள்‌ ஆகிய அரிய படையல்களை தமிழன்னைக்கு காணிக்கை முசலுத்தி யுள்ளார்‌.

அவர்‌ நூற்களைப்‌ படித்துப்‌ பயன்‌ பெறுவதுதான்‌ நரம்‌ அவரது கலைத்‌ தொண்டுக்குச்‌ செய்யும்‌ கைமாறா கும்‌. அவர்‌ நன்‌ முயற்சி நீடு வாழ்க!

இந்நூலை வெளியிட்ட ஜனசக்தி பிரசுராலயத்தாரை யும்‌ தமிழ்‌ மக்கள்‌ வாழ்த்தி ஆதரிக்க கடமைப்பட்டிருக்‌ கிறோம்‌. _— ஜனசக்தி 1-6-1957 (இரு. சாமி சிதம்பரனார்‌ எழுதிய “வள்ளுவர்‌ வாழ்ந்த தமிழகம்‌” என்ற நூலிற்கு ஜீவா எழுதி. ல்‌! மதிப்புரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கியச்சுவை.pdf/78&oldid=1523391" இலிருந்து மீள்விக்கப்பட்டது