பக்கம்:இலக்கிய தீபம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமுருகாற்றுப்படை 35 பெயர்சிறந்திருந்தது (அகம்.369); அங்கே அறங்கெழு நல்லவை யொன்று விளங்கியது (அகம். 93). இந்நகரின் கீழ் பாலுள்ள பிடவூரில் பெருஞ்சாத்தன் என்னும் வள்ளல் வாழ்ந்து வந்தனன் (புறம்.395). காவிரிப்பூம் பட்டினத்தில் பொலம்பூட்கிள்ளி அரசுபுரிந்துவந்தனன்; இவன் கோசரது படையை அழித்து அவர்கள் நாட்டைக் கைப் பற்றினன் (அகம். 205); பழையன்மாறனால் இக்கிள்ளி தோல்வியுற்றான் (அகம் 346). இடையாறு என்னும் நகர் முற்காலத்தில் கரிகால் வளவனுக்கு உரிமையாயிருந்து நக்கீரர் தும் சிறப்புற்றிருந்தது (அகம்.141).காவிரிபாயும் கூற்ற மொன்றில் எவ்வி அரசு புரிந்துவந்தான் (அகம். 126). இவன் சொல்லைக் கேளாது திதியனுக்குரிய காவல் மரமாகிய புன்னையை விரும்பி அவனோடு அன்னி யென்பவன் பொரு தழிந்தான் (அகம்.126). காலத் சேரநாட்டிற் கோக்கோதைமார்பன் அரசு புரிந்து வந்தான் (அகம் 346); இவனுக்கு வானவரம்பன் என்றொரு பெயரும் வழங்கியது (அகம்.389); இவனது தலைநகர் தண்ணான் பொருகையின் கரையிலுள்ள கருவூர் (அகம்.93) தொண்டியிலே குட்டுவன் அரசுபுரிந்தான் (அகம்.290). மூவேந்தரும் பாரியின் பறம்பை முற்றுகையிடக் கபி லர் தமது மதித்திறத்தால் நெற்கதிர்களைத் தூரத்தே நின்று கொணர்வித்துப் பஞ்சத்தை நீக்கினார் என்ற பழஞ்செய் தியை நக்கீரர் வியந்து பாராட்டுகின்றனர் (அகம். 78). தொண்டைநாட்டிற் பொலம்பூட்டிரையன் கடற்கரைப் பட்டினமாகிய பவத்திரியில்1 அரசாண்டுவந்தனன் (அகம். 340). வேம்பியென்னும் நகரில் முசுண்டையென்னும் குறு நிலமன்னன் சிறந்து விளங்கினான் (அகம்.249). அயிரி 1.இது. நெல்லூர் ஜில்லாவில், உதயகிரி தாலூக்கில் பாண்ட ரங்கம் என்ற பெயரால் வழங்குகிறது. (I.M.P.II p. 1151).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/44&oldid=1481522" இலிருந்து மீள்விக்கப்பட்டது