பக்கம்:இலக்கிய தீபம்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 இலக்கிய தீபம் யாற்றைத் தன்னகத்தே கொண்ட நாட்டிலே வடுகர் பெரு மகனாகிய எருமை யென்பவன் வாழ்ந்து வந்தனன் (அகம். 253). சிறுகுடி யென்னும் நகரிலே அருமன் என்ற ஒரு போர்வீரன் விளங்கினன் (நற்.367). கோடை யென்னும் மலையிலே மழவர் என்ற ஓரினத்தவர் இருந்தனர். இவர் கள் மயிற்றூவியாற் செய்த மாலையை அடையாளமாக அணிந்து வந்தனர் (அகம்.249). யவனர்கள் மதுவை இயற்றிப் பக்குவப் படுத்தித் தமது நாட்டிலிருந்து கொண்டுவந்து தமிழ்நாட்டு அரசர் முதலியோரை உண்பித்துக் களிக்கும்படி செய்தனர் (புறம்.56). இந் நக்கீரருக்குத் தமிழ்நாடு தம்மைப் போன்றார் பெறும் பரிசிலின்பொருட்டு உளதாகிய உலகமாகத் தோன் றிற்று. இரவலர்க்கு அருங்கலம் அருகாது ஈதலே அரசன் மேற்கொள்ள வேண்டும் ஒழுக்கமென இவர் கருதினர் (புறம், 56). செல்வத்துப் பயன் ஈதலே (புறம்.189) என வற்புறுத்துகின்றார். இப் பரிசிலின் பொருட்டுச் சேர சோழ பாண்டிய நாடுகளிலும் குறுநில மன்னர் நகர்களி லும் வள்ளல்கள் ஊர்களிலும் சுற்றித்திரிந்து பாடியிருக் கின்றார். தெய்வங்களைக்கூட மக்கட் பிறப்புவரை இழித் துக் கொணர்ந்து, தாம் பரிசிலின் பொருட்டுப் பாடுகின்ற அரசர்களை ஒப்பிடற்குரிய பொருள்களாக்கி விடுகின்றனர். மகளிர் பொற்கலத்தில் ஏந்திக் கொடுக்கும் மதுவுண்டு களித் தலையே சிறந்த வாழ்வென அரசர்க்கு அறிவுறுத்தி ஆசி கூறுகின்றார். இவ்வுலகத்திற்கும் ஆற்றுப்படை யியற்றிய நக்கீரர் மன வுலகத்திற்கும் பெரிதும் வேறுபாடுண்டு. மறந்தும் பொருட்பரிசில் அவ்வுலகில் இல்லை. அரசர்கள், சிற்றரசர் கள், வள்ளல்கள் யாரும் அங்கில்லை. முத்தியாகிய பரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/45&oldid=1481523" இலிருந்து மீள்விக்கப்பட்டது