பக்கம்:இலக்கிய தீபம்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

80 இலக்கிய தீபம் மேலே பொருந்துவதாகலாம் என்று நாம் கெண்ட முடிபோடு முரணுவதாக இவ்விவரத்தில் யாதும் காணப் பட வில்லை. ஐங்குறுநூற்றின் பின்னும், குறுந்தொகை முதலியவற்றின் பின்னும் தோன்றியது பதிற்றுப்பத்தென முன்பு கண்டோம். எனவே, தொகை நூல்களைக் கால முறையில் கீழ்வருமாறு அமைக்கலாம் : 1. குறுந்தொகை 2. நற்றிணை 3. அகநானூறு 4. ஐங்குறு நூறு 5. பதிற்றுப் பத்து 6. புறநானூறு " மேலே காட்டிய முறை தொகை நூல்கள் தொகுக்கப் பட்ட முறையாம். தனித்தனிச் செய்யுட்கள் தோன்றிய முறையாகா தென்பது நாம் மனம்கொள்ளுதற் குரியது. காலம் பற்றிப் புலவர்களது வரிசையும் மேற் குறித்த முறையினால் விளங்கமாட்டாது. சான்றாகச் சில சொல்லு கிறேன். ஐங்குறுநூற்றில் 'ஆகின்று' என்பது நிகழ்கால இடை நிலையாய் வந்துள்ளது. "சுரநனி வாராகின்றனள் (397) என்ற இடத்தைக் காண்க. இங்ஙனமே ஐங்குறு நூற்றில் 'இந்திர விழவிற் பூவின் அன்ன (62) 6T GOT வருகிறது. இவ்விரண்டு பிரயோகங்களும் முற்சங்க காலத்துக் காணுதல் இல்லை. இப் பதிற்றுப்பத்தில்" மாட்சிய மாண்டன பலவே (19) என வருகின்றது. 'மாண்டன என்ற சொல்லிற்குப் பழைய உரைகாரர் உருமாய்ந்தன என்று பொருள் எழுதினர். இப்பொருளும் சங்க காலத்துக் காணப்படாததொன்றாம். ஈண்டுக் குறித்த செய்யுட்களை எல்லாம் இயற்றியவர்கள் முற்சங்க காலத்தில் கடைசிப் பகுதியைச் சார்ந்தவர்கள் என்று நாம் துணிதல் வேண்டும். " மாண

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/89&oldid=1481676" இலிருந்து மீள்விக்கப்பட்டது