பக்கம்:இலக்கிய தீபம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

தொகை நூல்களின் காலமுறை 81 தொகை நூல்களில் எஞ்சியுள்ள கலித்தொகையும் பரிபாடலும் தோன்றிய காலமுறை எளிதில் வரையறுக்கக் கூடியதன்று. நல்லந்துவனார் நெய்தற் கலியை இயற்றினார் என்பது 'சொல்லொடுங் குறிப்பொடு முடிவுகொ ளியற்கை புல்லிய கிளவி யெச்சமாகும் ' என்பதனால் சொல்லெச்சமுங் குறிப்பெச்சமுமாகத் தம் பேரறிவு தோன்ற ஆசிரியர் நல்லந்துவனார் செய்யுட் செய்தார். என்ற 142-ம் கலியின் உரைப்பகுதியால் அறியலாம். கலித் தொகையைத் தொகுத்தவரும் இவரே யென்பர். . . 'ஈண்டுப் பாலைத்திணையையும் திணையாக ஆசிரியர் நல்லந்துவனார் கோத்தார் என்று கூறுக ' (கவி 1. உரை); ஆகலின் இத்தொகைக் கண்ணும் இவை மயங்கிவரக் கோத்தார் என்று கூறிவிடுக்க ' (கலி. 1. உரை) : ' பாலை, குறிஞ்சி, மருதம், முல்லை, நெய்தலெனவும் கோத்தார்: ஐங்குறு நூற்றினும் பிறவற்றினும் வேறுபடக் கோத்த வாறுங் காண்க ' (கலி. 1. உரை): 'இது புணர்தல் நிமித்த மாதலிற் குறிஞ்சியுட் கோத்தார் ' (கலி. 56. உரை): 'இஃது ஊடற் பகுதியாகலின் மருதத்துக் கோத்தார்' (கலி. 94. உரை) என்று வரும் உரைப் பகுதிகள் இதற்குச் சான்றுகளாம். நாடும் பொருள் சான்ற நல்லந் துவனாசான் சூடுபிறைச் சொக்கன் றுணைப்புலவோர்--தேடுவார் கூட்டுணவே வாழ்த்தோடு கொங்காங் கலியினையே ஊட்டினான் ஞாலத் தவர்க்கு என்ற பிற்காளச் செய்யுளும் இதனை வலியுறுத்தும், ஓல் வொரு தினைக்குமுரிய கலிச் செய்புட்கலை இயற்றிஞர் இன்னின்னரென ஒரு செய்யுள் கூறுகின்றது. அது வருமாறு: இ. தீ. 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_தீபம்.pdf/90&oldid=1481677" இலிருந்து மீள்விக்கப்பட்டது