உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

102


உருவங்களின்மீது உச்சிப் பகல் சூரியன் கூர்மையான வெய்யிலைப் பாய்ச்சிக்கொண்டிருந்தது. ஒருசில தலைவர்களைக் கைது செய்து, உடனே அவர்கள் தொழில் முகாம்கள் மூலம் சீர்திருத்தம் என்னும் பகுதிக்கு அனுப்பப்பட்டுவிடும் மாமூலான நடவடிக் கையாக அது அமைந்திருக்கவில்லை. ஏதோ ஒரு உருவில் அவமானப்படுத்தும் நோக்கத்தோடு பொது ஜனங்கள் அந்நிகழ்ச்சியைக் காணும்படியும் அதில் பங்கு கொள்ளும்படியும் கேட்டுக்கொள்ளப்பட்டிருந் தார்கள். துப்பாக்கி முனைகளில் பொருத்தப்பட் டிருந்த குத்துவாள்களுடன் இரும்புத் தொப்பிகள் அணிந்த காவலர்கள் விழிப்புடன்-உஷார் நிலையில்நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஆடவர்களும் பெண் டிரும் குழந்தைகளும் வேடிக்கை பார்த்தவாறு காத்திருந்தனர். எல்லாம் தயாரானது. ஒரு ராணுவத் தலைவ னும் இரு காரியதரிசிகளும் பின் தொடர டெங்பிங் தோன்றினன். 'குட்டி நெப்போலியன்!” என்ற முணுமுணுப்பு சுற்றிலும் பரவியது. அது ஒரு நீண்ட நடவடிக்கையாக இருக்கப் போவதாகவே மக்கள் கருதினர். - சாய்வு மேஜையும் நாற்காலியும் போடப் பட்டிருந்த மையப்பகுதியை நோக்கி டெங்பிங்கின் கட்டை குட்டையான உருவம் வந்துகொண்டிருந்தது தெரிந்தது. சாய்வு மேஜைமீது இருந்த தஸ்தா வேஜுகளைக் கலைத்துப் பிரித்துப் பார்த்துவிட்டு, முழந்தாளிட்டுப் பணிந்திருந்த உருவங்களை விரை வுடன் நோக்கினன். அவ்வுருவங்களுக்கு மத்தியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/102&oldid=1274862" இலிருந்து மீள்விக்கப்பட்டது