உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அத்தியாயம் 4 கமிஷனர் டெங்பிங்கும், எழுபது-எண்பது படைவீரர்களும் போக்லோவை வந்தடைந்தனர். இச் செய்தி கிராமமக்களின் இதயங்களை பீதியுறச் செய்தது. கம்யூனிஸ்ட் ஆட்சியின் தொடக்கத்தில் 'நிலச்சுவான்தாரர்களின் மரண தண்டனை நிறை வேற்றப்பட்ட காட்சியைக் கண்முன் காண எல்லாக் கிராமங்களும், நகரங்களும் கட்டாயப்படு த்தப் பட்டிருந்தன. அந்தச் சம்பவத்தைப் போலவே, இப்போது மக்கள் அனைவரையும் பெருந் திரளாகக் கூட்டி, மக்களைக்கொண்டே சோதனை நடத்தப் போகிருர்களோ, என்னவோ? போக்லோவைச் சேர்ந்த எல்லாக்குடி ஜனங்களும் வரிசை வரிசையாக நிற்கு மாறு ஆணையிடப்பட்டதிலிருந்து, முன் போலவே இப்போதும் பரிசோதனை நடக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. உச்சிப்பொழுது இருக்கும். கிராமத்துக்கு வெளியே கரடுமுரடான-கூழாங்கல் மைதானத்தில் ஆண்களும் பெண்களுமாக இருநூறு முந்நூறு பேர் வரிசைக் கிரமமாக நின்றுகொண்டிருந்தார்கள். நடு மையத்தில், கைகள் முதுகுக்குப் பின்னல் கட்டப் ப்ட்டு முழந்தாளிட்ட வண்ணம் இருந்த ஐந்து 7 -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/101&oldid=752658" இலிருந்து மீள்விக்கப்பட்டது