பக்கம்:இலட்சிய பூமி.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10, 'ஜனங்கள் மிகவும் மூர்க்கத்தனமாக இருக் கிருர்கள். போக்லோவில் ஏராளமான கொலைகள் நடந்துள்ளன. சில வீடுகள் இன்று கொளுத்தப் பட்டுவிட்டன; யாரால் அப்படிச் செய்யப்பட்ட தென்பது நமக்குப் புரியாது. அகதிகள் நகரை நோக்கி வெள்ளமாகப் புறப்பட்டுப் போய்க்கொண் டிருக்கின்றனர்! கம்யூன் எனப்படும் சிறிய நகராட் சிப் பிரிவு அமைப்பு முறை ஜனங்களைப் பயமுறுத்தி விட்டது. யுத்த அடிப்படையில் எல்லாவற்றையும் தொழில் முகாம்களாக மாற்றி நிர்வாகம் செய்வார்க ளென்று தெரிகிறது. ஒருவருமே அத்தகைய முறையை விரும்பவில்லை. எந்த நேரத்திலும், கொந் தளிப்பு உச்ச நிலைக்கு வத்துவிடும். நாம் தயாராக இருக்கவேண்டும்.” இருவரும் ஒருவருக்கொருவர் நல் இரவு' சொல்லிக்கொண்டு முத்தம் பரிமாறிக்கொள்வதற்கு முன்பாக, அவர்களின் கனவுகள், ஹாங்காங் வீடு, பிரயாண முஸ்தீபுகள் போன்றவை பற்றிப் பேசித் தீர்த்தார்கள். மறுநாள் மாலை மூன்று மணி அளவில், ஸிஸ்டர் ஆங்கெலிகாவுக்கு டூவான் குடும்பத்தினர் விடை கொடுத்தனுப்பும் சாக்குப்போக்கின் பேரில், அவளது தந்தையும் அவளது சகோதரரின் மகளுன சிறுவன் ஸ்ப்ரெளட்டும் அவனைச்சந்திப்பதென்று ஏற்பாடாகி இருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/100&oldid=752657" இலிருந்து மீள்விக்கப்பட்டது