உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


கிறது. அதற்கு ஊட்டக் குறைவுதான் காரணம். தினமும் ஒரு மனிதனுக்குத் தேவைப்படும் பாதிக் கலோரிக்கும் குறைவான உஷ்ணம்தான் நமக்குக் கிடைக்கிறது. ஹாங்காங் போய், தேவையான ஆகாரமும் பராமரிப்பும் கொடுத்தால், அவர் தேறி விடலாம். அவரை விட்டுவிட்டுப் போவதென்பது மிகவும் பயங்கரமான செயலென்றே எனக்குத் தோன்றும்.” ஜேம்ஸ் ஒரு நொடிப்பொழுது அவளைப் பிடித் தான். 'இது உன்னை மகிழ்வடையச் செய்யுமானுல் எனக்குச் சம்மதமே!' “என்னுடைய சகோதரர் மகன் சிறுவன் ஸ்ப்ரெளட்டும் வரவேண்டும். அவனுக்கு இப்போது தான் வயது பத்தாகிறது” என்று கூறி அவள் லேசான பெருமூச்சு விட்டுச் சிரித்தாள். பிறகு 'நான் துணிந்துவிட்டேன். என்ன ஆலுைம் சரியென்று. ஆனல் உள்ள நிலை இதுதான்” என்ருள். "நாம் இன்னும் அதிக அபாயத்தைச் சமாளிக்க நேரிடும்!....சரி, ஆனால் உன் தகப்பனர் உன்னுடன் இல்லாவிட்டால் நீ நிம்மதியாக இருக்கமாட்டாய் என்பது எனக்குத் தெரியும்” என்ருன் ஜேம்ஸ். வாய் பேசாமல் அவனுடைய முழங்கால்களில் மிருதுவாக அழுத்தியபடி, தனது தன்னம்பிக்கையை யும் நன்றியையும் ஜேம்ஸுக்குத் தெரிவித்தாள் ஈஸு. அதிகப்படியான சம்பவங்கள் நடந்துகொண் டிருப்பதாக என் தந்தை சொல்கிருர், நாம் விரை வாகச் செயல்பட வேண்டும்." - 'என்ன விஷயம்?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/99&oldid=1274861" இலிருந்து மீள்விக்கப்பட்டது