பக்கம்:இலட்சிய பூமி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104


கிடையாது. புரட்சியின் அர்த்தம்-பொதுவுடை மைச் சமுதாயத்தை அமைத்து, பதினைந்தே ஆண்டு களில் இங்கிலாந்தை சைன பின்தொடர்ந்து பிடித்து வெற்றிகொள்ள வேண்டுமென்னும் கட்சியின் இலட் சியம்-பெரும் பாய்ச்சல் முன்னணி அமைப்பின் விசேஷம்-ஜனங்களின் மனுேபலம், பற்ருக்குறை ஆகியவற்றைப்பற்றி உரத்த குரலில்ஆடம்பரமான பிரசங்கம் செய்தபோது, கடுமையான ஸ்தாயியில் அவன் குரல் ஒலித்தது. அவன் கிட்டத்தட்ட முக்கால்மணி நேரம் சத்தம் போட்டுப் பேசினன். பிறகு, பகிரங்கமான பரிசோதனையின் வேலைமுறை தொடங்கப் பெற்றது. குற்றவாளிகள் ஒருவர் பின் ஒருவராகக் கொண்டுவரப்பட்டார்கள். பொதுச் சொத்தான தானியக் களஞ்சியத்தை உடைக்கத் தொடங்கிய வர்களிலே முதலில் கிழக் குடியானவனும் மற்றவர் களும் நின்றனர். அவர்கள் என்ன செய்ய வேண்டு மென்று எதிர்பார்க்கப்பட்டார்கள் என்பதை கிராம வாசிகள் அறிந்து வைத்திருந்தார்கள்; அதுபற்றி அவர்களுக்குப் பாடம் சொல்லிக் கொடுக்கப்பட் டிருந்தது. தலைவர்கள் அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கேள்வியின்போதும் உயர் அதிகாரி அவர்களை நோக்கிக் கூச்சலிட்டான். அவர்கள் 'இல்லை', 'ஆம்', 'குற்றவாளிதான்!” என்று திருப்பிக் கூச்சலிட்டார்கள். அவர்கள் செய்ய வேண்டியிருந்த தெல்லாம், தலைவர்களைப் பின்பற்ற வேண்டுமென்பதேயாகும். பொதுஜன நீதிபதிகள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/104&oldid=1274864" இலிருந்து மீள்விக்கப்பட்டது