உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

105


ஒழுங்காக பிரமாணத்தோடு கோஷமிட்டனர்; கூச்சலின் இடியோசை இயந்திர கதியில் இயங்கி லுைம், வரவர பெரிதாகிக்கொண்டிருந்தது. ஒருவர் பின் ஒருவராக, எதிரிகள் குற்றவாளிகளென நிரூ பிக்கப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டனர். உயர் அதிகாரியைக் கடப்பாறையால் குத்தித் தாக்கிச் சாய்த்த குற்றவாளியும் கொண்டுவரப்பட்டான்; அப்போது எழுந்த கூச்சல் காது செவிடுபடும்படி செய்தது; கால் தப்படிகள் துரிதம் பெற்றன. டெங்பிங்கின் குரல் உலோகத் தொனி பெற்று, படிப்படியாக உச்சத்தை அடைந்து, இயந்திரத் துப்பாக்கியைப் போன்று தீயைக் கக்கியது. கிழவியின் முறை வந்தது; கிராம மக்களுக்கு ஒரு நல்ல படிப்பினையை கற்றுக்கொடுக்க நினைத் தான். - ஏற்கெனவே ஒன்றரை மணி நேரம் கழிந்து விட்டது. - - 'பொதுத் தான்யத்தை நீ களவாடியதை ஒத்துக்கொள்கிருயல்லவா?” - - "கட்சியின் பொதுவுடைமைப் புனர் நிர்மாண திட்டத்துக்கு நீ இடையூறு விளைவித்துக்கொண் டிருக்கிருய் என்பதை நீ அறிவாயா?" பதில் இல்லை. "தானியங்கள் பொதுமக்களுக்குச் சொந்த மானது என்பதையும் பொதுமக்களுக்குரிய தான்யங் களைத் திருடியதன் மூலம் நீ பொதுமக்களின் விரோதி என்பதையும் நீ உணர்கிருயா?”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/105&oldid=1274865" இலிருந்து மீள்விக்கப்பட்டது