உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

106


இதற்கும் விடை கிட்டவில்லை; டெங்பிங் எழுந்து நின்ருன். நீதிபதிகள் மெளனமாக இருந் தனர். 'நான் யாரென்று உனக்குத் தெரியுமல்லவா?" "நல்ல அதிகாரியே, நான் வயது சென்ற கிழவி. உன் இஷ்டப்படி எனக்குத் தண்டனை அளியும்!” டெங்பிங் அத்தகைய அவமரியாதையைச் சகித்துக்கொள்ள முடியவில்லை. முழத்தாளிட்டிருந்த கிழவியின் முகத்தில் பலமாக அறைகள் கொடுத் தான்: அவள் உடம்பு ஊசலாடித் தரையில் சாய்ந்தது. பார்வையாளர்களிடையே திகில் மூண்டது. "எழுந்திரு. இத்துடன் நீ தப்பிக்க முடியாது!" என்ருன். பிறகு காப்பாளனிடம் திரும்பி, 'அவள் கைகளை அவிழ்த்துவிட்டு, அவள் உடைகளை நீக்கி விடுங்கள்." என்று ஆணையிட்டான். தலைவர்களும்கூட இப்போது வாயடைத்துப் போயினர். - கிழவி இப்போது அறை நிர்வாணமாக நின்ருள். சில பெண்டுகள் விம்மி வெடித்துக் கண்ணிர் சொரிந்தனர். கிழவியின் பேரளுன பத்து வயசுச் சிறுவன் ஒருவன் கூக்குரலிட்டான். கிழவியின் மங்கிய கண்கள் இப்பொழுது சூன்யமான விறைப் பில் அமிழ்ந்திருந்தன. "மன்னிப்புக் கேள்!” கிழவி மன்னிப்புக் கேட்டாள். "கன்னத்தில் போட்டுக் கொள்!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/106&oldid=1274866" இலிருந்து மீள்விக்கப்பட்டது