உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இலட்சிய பூமி.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i07 வயதான கிழவி தன் முகத்தின் வலது பக்கத்தி லும் இடது பக்கத்திலுமாக மாறி மாறி அறைந்து கொண்டாள். 'இப்போது நீ மண்டியிட்டுப் பணிந்து சென்று, ஒவ்வொருவருக்கும் முன்பாக உன் முகத்தில் அறைந்துகொண்டு, பொதுமக்களின் விரோதியாக ஆனதற்காக அவர்களிடம் நீ மன்னிப்புக் கேள்!” காவலன் ஒருவன் அவளை இட்டுச்சென்ருன். கூழாங்கல்தரையில் கிழவி. முழந்தாளிட்டாள். போக்லோ போன்ற கிராமத்தில் முதிய பிராயத் துக்காக மதிக்கப்பட்ட பாட்டி அவள். அவளே நேசித்து அன்பு பாராட்டி மரியாதை செய்தவர் களுக்கு அவள் பெரிய அத்தை. 'பெரிய அத்தை' என்றே பெரும் பகுதிக் கிராம மக்கள் அவளைக் கூப்பிட்டனர். பெண்கள் அழுதனர்; பேரப்பிள்ளை பலமாக அழத் தொடங்கினன். அந்தக் கிழவி ஒவ்வொருவர் முன்னிலையிலும் முழந்தாளிட்டு நின்று தன் கன்னங்களில் தானே அறைந்த வண்ணம் கூட்டத்தை வலம் வந்தாள். வெறுக்கத்தக்க விஷயம் அது! அவளது ஒவ் வொரு சிறு அசைவும் வேதனையாக இருந்தது. அவளது முழங்கால்களில் கூரிய கூழாங்கற்கள் உராய்ந்து குழிகள் உண்டாகியிருந்தன. கிழவி சோர்ந்து சாயத் தொடங்கிள்ை. அவள் மேனிமுழுவதிலும் வேர்வை பெருகி வழிந்துகொண் டிருந்தது. திடீரென்று அவளுடைய பேரப்பையன் ஓடி வந்து அவளது அரைநிர்வாண மேனியின்மீது விழுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலட்சிய_பூமி.pdf/107&oldid=752664" இலிருந்து மீள்விக்கப்பட்டது